மனித உழைப்பை போற்றும் மகத்தான நாள்!! இந்தியாவில் முதன்முதலில் செங்கொடி பறந்த இடம் எது தெரியுமா??

பொதுவுடைமை இயக்கத்தின் தலைவர் சிங்காரவேலர்தான்...
may day parade
may day parade
Published on
Updated on
2 min read

மனித உழைப்பே மகத்தானது…’Technology is extension man’ என்று சொல்லுவார்கள். இந்த உலகம்  இதற்கு ஒரு பரிணாமத்தை அடைந்திருக்கிறது என்றால் அது உழைப்பை மையமாக கொண்டே  ஆகும். இந்த ஒட்டுமொத்த உலக வளர்ச்சியிலிருந்து உழைப்பை நாம் நீக்கிவிட்டால், மிஞ்சுச்சுவது பயன்பாடற்ற குப்பைகளே ஆகும்.  “தேவையும் பயன்பாடுமே” மனிதனின் பரிணாமத்தில்  பங்காற்றியிருக்கிறது. இந்த பரிணாம பயணம் நெடுகிலும் ‘உழைப்பு’ பெரும் பங்காற்றியிருக்கிறது. இந்த மனித உழைப்பு அவனின் ஆக்கத்திற்கும் அறிவார்ந்த முன்னேறிய சமூகமாக மாறி இயற்கையோடு இணைந்த ஒரு மகிழ்வான வாழ்வை வாழ வேண்டுமே தவிர. அந்த மனித உழைப்பையே சுரண்டி அதே மனிதனின் மேல் பாகுபாடு சுமத்தி தன் இனக்குழுவையே இரண்டாக பிரிப்பது இயற்கைக்கு புறம்பானது. 

அனைத்து உயிரிலும் குரூரமானவன் மனிதனே, சுயநலம் என்ற தன்மையால் பீடிக்கப்பட்டவன், தன்னை சுமக்க, தனக்காக உழைக்க மற்ற மனிதர்களை துன்புறுத்துகிறான்..இப்படி பன்னெடுங்காலமாக அடக்குமுறையும், உழைப்பு சுரண்டலும், அடிமைத்தனமும், காலணி ஆதிக்கமும் அவனோடே சேர்ந்து பரிணமித்தது..

“ஒவ்வொரு வினைக்கும் (action) அதற்கு இணையான எதிர் வினை உண்டு." என்ற நியூட்டனின் மூன்றாம் விதிக்கு ஏற்ப,  இந்த ஒடுக்குமுறைக்கு எல்லாம் ஒரே எதிர் வடிவமாக அதே மனிதன் புரட்சியை கையில் எடுக்கிறான். தங்களை ஒடுக்கிய பெரு முதலாளிகளை எதிர்த்த தொழிலாளர்களின் வர்க்க புரட்சியே வரலாற்றின் துவக்க புள்ளி.. தொழிலாளர் போராட்டங்கள் பலநூறு ஆண்டு வரலாறு . 250 ஆண்டுகளுக்கு முன்பே தொழிலாளர்கள் இயக்கமாக ஒன்றிணைந்து தங்கள் போராட்டங்களை முன்னெடுக்கின்றனர்.

வரலாறு நெடுகிலும் பல தொழிலாளர் போராட்டங்கள் நடைபெற்றுள்ளன. அந்த வகையில் ஹே மார்க்கெட் படுகொலை சம்பவம் தான் இன்று நாம் அனுசரிக்கும் சர்வதேச உழைப்பாளர் தினத்துக்கு காரணமாக அமைந்தது. ஹேமார்க்கெட் சதுக்கத்தில் 8 மணி நேர வேலையை கோரிக்கையாகக் கொண்ட தொழிலாளர்கள் போராட்டம் நடத்திய போது‍ தொழிலாளர்கள் மீது‍ காவல்துறை கொடூர தாக்குதலை நடத்தியது.

 சிக்காகோவில் மே முதல் நாள் வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டு மிகத்தீவிரமடைந்திருந்தது. அப்போது இடதுசாரி தொழிலாளர்கள் இயக்கத்தின் ஒரு மையமாக சிக்காகோ திகழ்ந்தது. தொழிலாளர் இயக்கத்தின் அரசியல் தொழிலாளர் வாழ்க்கை மற்றும் வேலை நிலைமைகளை மேம்படுத்தும் பொருட்டு எந்த நேரத்திலும் தொழிலாளர்களை போராட்டத்தில் இறங்க தொழிலாளர்கள் தயாராக இருந்தனர். 1886 மே முதல் தினம் உச்சக் கட்டத்தையடைந்த 8 மணி நேர இயக்கமானது, அமெரிக்க தொழிலாளி வர்க்கத்தின் போராட்ட வரலாற்றில் ஒரு முக்கிய அத்தியாயத்தை ஏற்படுத்தியது. மே 3-ம் நாள் வேலை நிறுத்தம் செய்த தச்சு வேலை தொழிலாளர்களின் கூட்டத்தில் நிகழ்ந்த போலிஸின் காட்டு மிராண்டித்தனமான அடக்கு முறையை எதிர்த்து மே 4-ஆம் நாள் வைக்கோல் சந்தை சதுக்கம் என்றழைக்கப்படும் இடத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

அந்த கூட்டம் அமைதியாக நடந்தது, அதில் நடந்த கலவரத்தில் 4 தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர். 

இந்தியாவில் எப்போது மே தினம் கொண்டாடப்பட்டது?

இந்தியாவிலே முதன்முதலில் மே தினம் கொண்டாடப்பட்டது  நம்ம சென்னையில்தான்.. 1923  இந்தியாவில் பொதுவுடைமை இயக்கத்தின் நிறுவனத்தலைவர்களில் ஒருவராக இருந்த சிங்காரவேலர்தான் இந்த மே தினக் கூட்டத்தினை துவங்கி வைத்தார். மேலும் அப்போதுதான் செங்கொடி முதன் முதலில் இந்த மண்ணில் பறக்க ஆரம்பித்தது.தென் தமிழகத்தின் முதல் கம்யூனிஸ்ட் ஆன சிங்காரவேலர் தான் இந்நிகழ்விற்கு தலைமை தாங்கினார். ஏறத்தாழ 102 ஆண்டுகளுக்கு முன்பு பொதுவுடமை கட்சியை தமிழகத்தில் நிறுவி, அந்நாளின் சிங்காரவேலர் ஆற்றிய முதல் பேருரையை பிபிசி முகமை பதிவிட்டிருந்தது அதில்,

"மே1 உலகத் தொழிலாளர்கள் அனைவருக்கும் புனிதமான நாள். இந்தியாவின் தொழிலாளர்கள் அனைவரும் மே தினத்தைக் கொண்டாடி நம் ஆதரவை உலகெங்கும் இருக்கும் தொழிலாளர்களுக்கு உணர்த்த வேண்டும். அதேபோல, உலகெங்குமுள்ள துன்பப்படும் தொழிலாளர்களுக்கு பலமாக இன்னும் சில ஆண்டுகளில் மாறும் அளவுக்கு ஒரு பெருங்கூட்டமாக உருவாவதற்கான அடிக் கல்லை இன்று பதியுங்கள். அது அவர்களை நாம் எல்லோரும் ஒரே வர்க்கத்தை சேர்ந்தவர்கள் என்று உணர வைக்க வேண்டும். மெட்ராஸ் மெயில் பத்திரிகையில், சான்றளிக்கப்பட்ட தொழிலாளர்கள் மட்டுமே இந்த மே தினத்தை கொண்டாடுகிறார்கள் என்று சொல்லப்பட்டுள்ளது. ஆனால், லேபர் கிசான் கட்சி ஒவ்வொரு கடைக்கோடி சாதராண தொழிலாளிகளுக்காகவும் நிற்க வேண்டும் என்றே எண்ணம் கொண்டுள்ளது."  இவ்வாறு அவர் பேசியிருந்தார்.

உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள். நீங்கள் இழப்பதற்கு எதுவும் இல்லை - பூட்டப்பட்ட விலங்குகளைத் தவிர” -கார்ல் மார்க்ஸ் 

எனவே உலகில் எந்த விஷயமும் மனிதனின் உழைப்பின்றி நடைபெறுவதில்லை. ஆனால் அந்த ஆற்றல் மூலத்தை அவன் எவ்வண்ணம் பயன்படுத்திகிறான் என்பதே நமது கேள்வியாக உள்ளது. உழைப்பை விற்றே பொருளீட்டுகிறோம் நம்மை எவரும் சுரண்டாத வண்ணம் பார்த்துக்கொள்வது நம் அனைவரின் கடமை மற்றும் உரிமை ஆகும்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com