இளம்பெண்ணை கர்ப்பமாக்கி கொலை செய்த காதலன்! மூவருக்கு இரட்டை ஆயுள்.. இராமநாதபுரம் மகிளா நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

போலீசார் நடத்திய விசாரணையில் வாசுகியின் செல்போன் பயன்பாட்டை ஆய்வு செய்துள்ளனர்
 இராமநாதபுரம் murder
Published on
Updated on
1 min read

காதலித்து கர்ப்பமாக்கி கொலை செய்த காதலன் உட்பட மூவருக்கு ஆயுள் தண்டனை. இராமநாதபுரம் மகிளா நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு.

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே வாத்தியனேந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம் இவரது மகள் வாசுகி. திருப்பூர் மாவட்டம் காமநாயக்கன் பாளையத்தில் உள்ள பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்துள்ளார் வாசுகி. சொந்த ஊரான வாத்தியனேந்தல் கிராமத்தை சேர்ந்த மாதவனும் வாசுகியும் காதலித்து  வந்துள்ளனர்.

2022 -அக்டோபர் 2 ம் தேதி வாசுகியை காணவில்லை என்று தந்தை ஆறுமுகம் கீழத்தூவல் போலீசில் புகார் அளித்துள்ளார், அதனை தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் வாசுகியின் செல்போன் பயன்பாட்டை ஆய்வு செய்துள்ளனர். அதில் அதே பகுதியை சேர்ந்த ராமு என்பவரின் மகன் திருக்கண்ணன் (30) என்பவரின் செல்போனில் வாசுகியின் சிம்கார்டு பயன்படுத்தப்பட்டது கண்டுபிடுக்கப்பட்டது. இதையடுத்து அவரிடம் விசாரணை நடத்திய போது திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளன.

மாதவனும் வாசுகியும் காதலித்து வந்த நிலையில், வாசுகி கர்ப்பமாகியுள்ளார். இது குறித்து அவரிடம் தெரிவித்து, தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டுள்ளார் வாசுகி. அதற்கு மறுத்து வந்த மாதவன் அடிக்கடி அந்த பெண்ணுடன் சண்டையிட்டு வந்துள்ளார். அதையடுத்து கடந்த 2022ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 30ம் தேதி வீட்டிலிருந்த வாசுகியை தஞ்சாவூர் செங்கிப்பட்டி மதுக்கூரான் கண்மாய் பக்கம் வர சொல்லி செல்போனில் அழைத்து இருக்கிறார். காதலன் தானே என நம்பி சென்ற வாசுகிக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் அங்கே மாதவனின் அண்ணன் திருகண்ணன் மற்றும் தஞ்சாவூர் பாளையம்பட்டியை சேர்ந்த அவரின் நண்பர் புண்ணியமூர்த்தி (38) என்பவரும் வந்துள்ளனர். வாக்குவாதத்தில் ஈடுபட்ட மூவரும் அந்த பெண்ணை அருகில் இருந்த குளத்தில் மூழ்கடித்து கொலை செய்துள்ளனர். மேலும் கொலை செய்து தண்ணீர்க்குள் புதைத்துவிட்டனர்.

அங்கிருந்து ஊர் திரும்பிய அண்ணனும் தம்பியும் எதுவும் நடக்காதது போல இயல்பாக இருந்துள்ளனர். ஆகஸ்ட் மாதம் நடந்த இந்த கொலை, டிசம்பர் மாதத்தில் வாசுகியின் எலும்பு மட்டும் குளத்தில் மிதந்தபடி கிடைத்துள்ளது. வாசுகியை காணவில்லை என தந்தை ஆறுமுகம் அளித்த புகாரின் பேரில் கீழத்தூவல் போலீசார் வழக்குப்பதிவு செய்து இராமநாதபுரம் மகிளா நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. இந்நிலையில் மூவரும் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டு, நேற்று நீதிபதி கவிதா அவர்களால் தீர்ப்பு வழங்கப்பட்டது.

அதில் குற்றவாளிகளான மூவருக்கும் கூட்டாக சதித்திட்டம் தீட்டி கொலை செய்த காரணத்திற்கான காதலன் மாதவன் உட்பட மூவருக்கும் இரட்டை ஆயுள் தண்டனை மற்றும் 12 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி கவிதா தீர்ப்பு வழங்கினார். இதனை ஏக காலத்திற்கும் அனுபவிக்க உத்தரவிட்டார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com