“முன்னாள் காதலனுடன் ரூம் எடுத்த இளம்பெண்” - இரவு முழுவதும் நடந்த தகராறு.. அதிகாலையில் மீட்கப்பட்ட காதல் ஜோடியின் சடலங்கள்!

ஹரி என்பவருடன் காதல் ஏற்பட்டு பேசி வந்த நிலையில் பாவ்யா அவரை சில தினங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார்...
periyamedu murder and suicide  bharathi perumal and bhavya
periyamedu murder and suicide
Published on
Updated on
2 min read

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அடுத்த பாரதி நகர் பகுதியை சேர்ந்தவர் 21 வயதுடைய பவ்யா. இவர் வடபழனியில் தங்கி அங்குள்ள தனியார் கல்லூரியில் நர்சிங் படித்து வந்த நிலையில் சாலிகிராமம் பகுதியில் உள்ள தனியார் திரைப்பட ஸ்டுடியோவில் பணியாற்றி வந்த பாரதி பெருமாள் உடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் தொடர்ந்து பழகி வந்த காரணத்தால் இவர்களது பழக்கமானது நாளடைவில் காதலாக மாறியுள்ளது. தொடர்ந்து இருவரும் ஜோடியாக வெளியில் சுற்றி வந்துள்ளனர்.

அப்போது இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு அடிக்கடி தகராறு நடந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த பவ்யா பாரதி பெருமாளுடன் இருந்த காதலை கைவிட்டதாக சொல்லப்படுகிறது. பின்னர் சில மாதங்களில் மதுரையை சேர்ந்த ஹரி என்பவருடன் காதல் ஏற்பட்டு பேசி வந்த நிலையில் பாவ்யா அவரை சில தினங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இவர்களது காதலை இரு வீட்டு பெற்றோரும் ஏற்றுக்கொள்ளாததால் இருவரும் ஹரியின் உறவினர் வீட்டில் தங்கி இருந்திருக்கின்றனர்.

இந்நிலையில் திருமணமான சில தினங்களிலேயே பவ்யாவுக்கும் ஹரிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு இருவரும் ஒருவரை ஒருவரை சரமாரியாக அடித்து கொண்டு சண்டை போட்டதாக கூறப்படுகிறது. இதனால் வருத்தமடைந்த பவ்யா மதுரையில் இருந்து சென்னைக்கு வந்திருக்கிறார். பின்னர் விடுதியில் நர்சிங் இறுதி ஆண்டு தேர்வு எழுதி வந்த நிலையில் மீண்டும் பாரதி பெருமாளுடன் பழக்கம் ஏற்பட்டு நட்பை தொடர்ந்த நிலையில் நேற்று முன்தினம் விடுதியில் ஊருக்கு செல்வதாக கூறிவிட்டு வெளியேறியுள்ளார்.

ஆனால் வீட்டிற்கு செல்லாமல் தன் முன்னாள் காதலன் பாரதி பெருமாள் உடன் பெரியமேட்டில் உள்ள விடுதியில் அறை எடுத்து தங்கியுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே காதல் பிரச்சனை குறித்து வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது அப்போது ஆத்திரமடைந்த பாரதி பெருமாள் “என்னை காதலிச்சிட்டு வேற ஒருத்தன் கூட கல்யாணம்” என கேட்டு அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் பவ்யா பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் பாரதி பெருமாள் அதே அறையில் தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மறுநாள் காலை இருவரும் அறையை விட்டு வெளியே வராத நிலையில் சந்தேகமடைந்த ஹோட்டல் ஊழியர்கள் கதவை திறந்து பார்த்த போது பவ்யா காட்டில் மீது சடலமாகவும், பாரதி பெரும் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர். தொடர்ந்து இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இருவரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் வழக்கு பதிவு செய்த கொலை மற்றும் தற்கொலைக்கான முழு காரணம் பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com