"கை கால்களை கட்டிப்போட்டு.. சீரழிக்கப்பட்ட 11 வயது சிறுமி!" - ஆசைவார்த்தை கூறி கடைக்குள் அழைத்து சென்ற 56 வயது முதியவர்

விசாரணையில் இரவு 11 மணி அளவில் எழுதுவதற்கு பேனா வாங்குவதற்காக சிறுமி அதே பகுதியில் உள்ள ஒரு கடைக்கு சென்றுள்ளார்
sexually assault
Published on
Updated on
1 min read

டெல்லியில் சதர் பஜார் பகுதியில், ஆறாம் வகுப்பு சிறுமி ஒருவரை, ஆசை வார்த்தை கூறி ஒருவர் தனது கடைக்குள் அழைத்துச் சென்று, அவரின் கைகால்களை கட்டிப்போட்டு பாலியல் வன்கொடுமை சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காவல்துறையின் கூற்றுப்படி, செப்டம்பர் 16 ஆம் தேதி இரவு, ஒரு கடைக்காரரால் 11 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் குறித்து தகவல் ஒன்று பெறப்பட்டுள்ளது. சதர் பஜார் காவல்துறையினர் மற்றும் மகளிர் காவல் நிலைய ஏசிபிக்களுடன் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தனர். விசாரணையில் இரவு 11 மணி அளவில் எழுதுவதற்கு பேனா வாங்குவதற்காக சிறுமி அதே பகுதியில் உள்ள ஒரு கடைக்கு சென்றுள்ளார். அங்கு இவர் தனியாக வருவதை நோட்டமிட்ட 54 வயதான மக்சூத் என்பவர், சிறுமியை நெருங்கி பேச்சு கொடுத்துள்ளார். பின்னர் அருகிலுள்ள தையல் கடை ஒன்றிற்கு சிறுமியை ஆசை வார்த்தை கூறி அழைத்துச் செல்லப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

குற்றம் சாட்டப்பட்ட மக்சூத், அந்த சிறுமியின் கை கால்களை கட்டிப்போட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். வெகுநேரத்திற்கு பின்னர் வீட்டிற்கு திருப்பிய சிறுமி தனது பெற்றோரிடம் இது குறித்து கூறி அழுதுள்ளார். அதையடுத்து காவல்துறையை தொடர்பு கொண்டு அளித்த புகாரின் அடிப்படையில், வடக்கு மாவட்ட மகளிர் காவல் நிலையத்தில், பாலியல் வன்கொடுமை, பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம் (போக்சோ) மற்றும் சட்டவிரோத சிறை வைப்பு தொடர்பான பிரிவுகளின் கீழ் முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்தனர்.

காவல்துறைக்குத் தகவல் கிடைத்ததை அடுத்து, குற்றம் சாட்டப்பட்ட 56 வயதான மக்சூத் கைது செய்யப்பட்டு, அன்றே நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டார். இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருவதாகவும், இது மிகுந்த கவனத்துடன் கையாளப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான புகார்கள் மீது மகளிர் காவல் நிலையம் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது என்று தெரிவித்துள்ளனர். குற்றம் சாட்டப்பட்ட மக்சூத் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

குழந்தைகள் தங்கள் பாதுகாப்பற்ற சூழலை உணர்ந்தால் உடனடியாகப் புகாரளிக்க 1098 என்ற குழந்தை உதவி மைய எண்களைப் பயன்படுத்தலாம். இதுகுறித்து பெற்றோர்களும் அவர்களுக்கு விழிப்புணர்வு கொடுக்க வேண்டும். இதுபோன்ற குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்கள் குறித்து புகார் அளிக்க 1098 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com