“80 வயது மூதாட்டியிடம் அத்துமீறிய 7 ஆம் வகுப்பு சிறுவன்” - வாயில் துணியை அடைத்து சித்ரவதை.. திருவள்ளூரில் பரபரப்பு!

மூதாட்டியைப் பாதுகாப்பாக வீட்டில் கொண்டு சேர்ப்பதாகக் கூறி அவரை அழைத்துச் சென்றுள்ளான்...
Tiruttani Crime News
Tiruttani Crime News
Published on: 
Updated on: 
1 min read

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருகே, 80 வயது மூதாட்டியிடம் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதாக 13 வயது சிறுவன் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மூதாட்டியிடம் சிறுவன் அத்துமீற முயன்றதாகக் கூறப்படும் நிலையில், புகாரின் அடிப்படையில் போலீசார் விரைந்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுத்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருகே உள்ள ஆர்.கே.பேட்டை வட்டம் சமத்துவபுரம் பகுதியில் 80 வயதான சின்னப்பொண்ணு தனியாக வசித்து வருகிறார்.

சம்பவத்தன்று(அக் 13) அவர் தனது வீட்டின் அருகே நடந்து சென்று கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த ஏழாம் வகுப்பு படிக்கும் 13 வயது சிறுவன், மூதாட்டியைப் பாதுகாப்பாக வீட்டில் கொண்டு சேர்ப்பதாகக் கூறி அவரை அழைத்துச் சென்றுள்ளான். இதையடுத்து, மூதாட்டியை அவரது வீட்டிற்கு அழைத்துச் சென்ற சிறுவன், அங்கு யாரும் இல்லாததை கவனித்து, சிறுது நேரத்தில் அவரிடம் அத்துமீற முயன்றதாகக் கூறப்படுகிறது.

மூதாட்டியின் வாயில் துணியை வைத்து, அவரைப் பலவந்தப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதாகப் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த மூதாட்டி துணியை அகற்ற முயற்சித்து அலறியுள்ளார். அவரது சத்தத்தைக் கேட்டு அருகில் இருந்த உறவினர்கள் மற்றும் குடும்பத்தினர் ஓடிவந்து சிறுவனைப் பிடித்ததாகக் கூறப்படுகிறது. பின்னர், இந்தச் சம்பவம் குறித்து போலீசாரின் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு போலீசார் வருவதில் தாமதம் ஏற்பட்டதாகக் கூறப்படும் நிலையில், அங்கிருந்து சிறுவன் தப்பிச் சென்றுள்ளான். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த ஆர்.கே.பேட்டை போலீசார், மூதாட்டியிடம் புகார் பெற்று விசாரணையைத் தொடங்கினர். தப்பிச் சென்ற சிறுவனைத் தேடும் பணியில் ஈடுபட்ட போலீசார், சுமார் ஐந்து மணி நேரத்திற்குள் அவரைப் பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். தொடர்ந்து விசாரணை நடத்திய பின்னர், சிறுவன் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 80 வயது மூதாட்டியிடம் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதாக 13 வயது சிறுவன் கைது செய்யப்பட்ட சம்பவம், சமத்துவபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com