பல்லாவரத்தை அடுத்த பொழிச்சலூரில் 13 வயதான சிறுமி கோபிகா( பெயர் மாற்றப்பட்டுள்ளது) தனது பெற்றோருடன் வசித்து வந்துள்ளார்.இவர் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். இவரது தந்தை மாற்றுத்திறனாளி என்பதால் அரசு மருத்துவமனையில் காவலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார்.
இந்நிலையில் அதே பகுதியில் தண்ணி கேன் போடும் வேலையை செய்யும் சிறுவன் நந்த குமார் கோபிகா வீட்டிற்கு தண்ணி கேன் போடும் போது இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டுள்ளது. பின்னர் நந்தகுமார் கோபிகாவுடன் தொடர்ந்து பழகி வந்துள்ளார்.
இந்நிலையில் ஒரு நாள் கோபிகாவின் வீட்டிற்கு சென்ற நந்தகுமார், கோபிகாவின் தாயின் உதவியுடன் கோபிகாவை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பின்னர் நந்தகுமார் அவரது நண்பர்களுக்கு கோபிகாவை அறிமுகம் செய்து வைத்துள்ளார்.அவர்களும் சிறுமியின் தாய் உதவியுடன் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
இதனால் சிறிது காலம் கழித்து கோபிகா கர்ப்பமடைந்துள்ளார். இதனை பரிசோதிக்க கோபிகாவின் தாய் கோபிகாவை மருத்துவமனைக்கு அழைத்து சென்ற நிலையில், மருத்துவர்கள் கோபிகா கர்ப்பமாக இருப்பதை உறுதி செய்த மருத்துவர்கள் இதுகுறித்து காவல் துறையிடம் தகவல் தெரிவித்துள்ளனர்.
தகவலறிந்த காவல்துறையினர் இதுகுறித்து கோபிகாவின் தாயிடம் விசாரணை மேற்கொண்ட நிலையில் தாம்பரம் பகுதியை சேர்ந்த நந்தகுமார்(19), சஞ்சய், சஞ்சய் குமார், சூர்யா,ஈஷா,நிக்சன் உட்பட 13 போரையும், சிறுமியின் தாயையும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
சிறுமியின் தாயின் உதவியுடனே, சிறுமியை 13 பேர் பாலியல் வன்கொடுமை செய்தது. அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பையும், கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்