சிகரெட்டில் போதை கலந்து கொடுத்து.. மாறிமாறி சீரழிக்கப்பட்ட 16 வயது சிறுமி! - சிறுவர்கள் உட்பட 8 பேர் கைது

ஒரு ஹோட்டல் மற்றும் மேட்சல் அருகே உள்ள ஒரு காலி ரயில் பெட்டி உட்பட பல்வேறு இடங்களில் கொடூரம் நடந்ததாக புலனாய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்
hyderabad crime
Published on
Updated on
2 min read

ஹைதராபாத்தில் 16 வயது சிறுமி ஒருவர் போதை பொருட்கள் கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த குற்ற சம்பவம் தொடர்பாக தற்போது எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். செப்டம்பர் 10 அன்று அந்த சிறுமி, அவர்களின் பிடியில் இருந்து தப்பித்து வீடு திரும்பியதாக கூறப்பட்டதை அடுத்து இந்த வழக்கு வெளிச்சத்திற்கு வந்தது. பின்னர் தனது குடும்பத்தினருடன் காவல்துறையை அணுகி இது குறித்து புகார் அளித்துள்ளார். அதனைத் தொடர்ந்து, போக்சோ சட்டம் மற்றும் BNS தொடர்புடைய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

புகாரின்படி, அந்தப் பெண் தனது தந்தையின் கண்டிப்பை மீறி செப்டம்பர் 9 தேதி வீட்டை விட்டு சென்றுள்ளார். அங்கிருந்து பொல்லாரம் ரயில் நிலையத்தை அடைந்து சமூக வலைத்தளம் மூலம் பழக்கமான நீரஜ் என்பவரை சந்தித்ததாகக் கூறப்படுகிறது. பின்னர் அங்கு விக்கி என்ற மற்றொரு நபரும் வந்துள்ளார். அவர்கள் அந்தப் பெண்ணுக்கு சிகரெட்டில் கஞ்சா கலந்த  கொடுத்து அந்த பெண்ணை மயக்கமடைய செய்துள்ளனர். பின்னர் அந்த சிறுமியை இருவரும் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

பின்னர் விக்கி, அந்த சிறுமியை ஹைதராபாத்தின் துலபள்ளி பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு மற்றொரு நபரான நிகில் மற்றும் மேலும் இருவர் இந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதைத் தொடர்ந்து, பொல்லாரத்தில் உள்ள ஒரு வீடு, துலபள்ளியில் உள்ள ஒரு ஹோட்டல் மற்றும் மேட்சல் அருகே உள்ள ஒரு காலி ரயில் பெட்டி உட்பட பல்வேறு இடங்களில் கொடூரம் நடந்ததாக புலனாய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் பொல்லாரத்தில் உள்ள விக்கியின் வீட்டில் இருந்து அந்தப் பெண் தப்பித்து சென்றுள்ளார். ஆனால் அவள் மீண்டும் விக்கி மற்றும் அவனது நண்பன் கணேஷிடம் பிடிபட்டு, அவர்களால் மீண்டும் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளாள்.. பின்னர், அந்த சிறுமியை ஆட்டோ ரிக்ஷாவில் ஏற்றி சென்ற போது, ​​அவர்களிடமிருந்து தப்பித்து இறுதியாக தன் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு நடந்ததை கூறி அழுதுள்ளார்.

குற்றம் சாட்டப்பட்டவர்களில் சிலர் சமூக ஊடகங்கள் மூலம் அந்தப் பெண்ணுடன் தொடர்பு கொண்டிருந்ததாகக் காவல்துறை தெரிவித்துள்ளது. கடந்த ஒன்றரை ஆண்டு காலகட்டத்தில், குற்றவாளி ஆறு பேர் சம்பந்தப்பட்ட முந்தைய பாலியல் குற்றச்சாட்டுகளையும் புலனாய்வாளர்கள் விசாரித்து வருகின்றனர்.

ஜெர்ரி வருண் என்ற ஒரு குற்றவாளி சம்பந்தப்பட்ட முந்தைய சம்பவம் தொடர்பாக ஒரு தனி குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஒரு காருக்குள் நடந்ததாகக் கூறப்படும் பாலியல் வன்கொடுமைக்கு முன்பு, அந்தப் பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த சாக்லேட் கொடுக்கப்பட்டதாக புலனாய்வாளர்கள் தெரிவித்தனர். புகாரின்படி, மற்றொரு குற்றவாளியான ரோமலா வருண், அந்தப் பெண்ணுக்கு அறிமுகப்படுத்தப்பட்டதாகவும், அவர் அப்பெண்ணை சிகரெட், மது மற்றும் கஞ்சா ஆகியவற்றை உட்கொள்ள வைத்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. முறையான முகவரி மற்றும் சோதனை இல்லாமல் சிறுவனை வளாகத்திற்குள் நுழைய அனுமதித்து, அறை வழங்கியதாக கூறப்படும் துலபள்ளி ஹோட்டலின் உரிமையாளர் மற்றும் மேலாளரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு கஞ்சா வழங்கியதாகக் கூறப்படும் நபர்களை அடையாளம் கண்டு, அவர்களையும் கண்டறியும் பணியிலும் புலனாய்வாளர்கள் ஈடுபட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு குற்றவாளியின் தனிப்பட்ட பங்கையும் காவல்துறை சரிபார்த்து வருவதாகவும், போதைப்பொருட்களின் விநியோகம் மற்றும் பயன்பாடு தொடர்பான குற்றச்சாட்டுகளையும் விசாரித்து வருவதாகவும் அவர் கூறினார்.

குற்றம் சாட்டப்பட்ட எட்டு பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளதாக  காவல்துறை தெரிவித்துள்ளது. தலைமறைவாக உள்ள ஒன்பதாவது குற்றவாளியைக் கண்டுபிடிப்பதற்கான முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com