

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவர், கடந்த ஆக. 30ம் தேதி, தனது பாட்டி ஊரில் நடந்த கோவில் திருவிழாவுக்கு சென்றுள்ளார். சிறுமிக்கு ஏற்கனவே பழக்கமான புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி பகுதியை சேர்ந்த சந்தோஷ் என்பவரும் திருவிழாவுக்கு வந்துள்ளார். சந்தோஷ் சிறுமியை தனியாக வரச்சொல்லி அழைப்பு விடுத்துள்ளார். தனியாக சென்ற சிறுமியிடம் திருமணம் செய்துக்கொள்ளுவதாக, ஆசை வார்த்தை கூறி அழைத்து சென்றுள்ளார். பின்னர் இருவரும் தனிமையில் இருந்துள்ளனர்.
சிறுமியுடன் சந்தோஷ் செல்லவதை பார்த்த, அடைக்கதேவன் பகுதியை சேர்ந்த அரவிந்த் மற்றும் அவரது நண்பர்களான சோலைக்காடு பகுதியை சேர்ந்த ஆறுமுகம் உடன் 17,15 வயது இரண்டு சிறுவர்கள் என நான்கு பேரும் பின்தொடர்ந்து சென்றுள்ளனர். சந்தோஷ் சிறுமியுடன் தனிமையில் இருப்பதை பார்த்த நான்கு பேரும் சந்தோஷை விரட்டிவிட்டு அந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளனர். மேலும் இது குறித்து வீட்டில் சொன்னால், உனது காதலன் குறித்து குடும்பத்தினரிடம் சொல்லிவிடுவோம் என்றும் மிரட்டி அனுப்பி உள்ளனர்.
வீட்டிற்கு சென்ற சிறுமியின் நடத்தையில் சந்தேகம் அடைந்த அவரது தாய், என்ன நடந்தது என்று விசாரித்துள்ளார். சிறுமியிடம் விசாரித்த போது, முறையாக பதில் அளிக்காமல் தவிர்த்துள்ளார். இதற்கிடையில், சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த விவகாரம் நேற்று முன்தினம் கிராமத்தில் உள்ள சிலருக்கு தெரியவந்ததுள்ளது. பின்னர் சிறுமி நடந்ததை தன் தாயிடம் தெரிவித்துள்ளார்.
அவர்கள் சேதுபாவாசத்திரம் போலீசில் அளித்த தகவலின் பேரில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சந்தோஷ், அரவிந்த், ஆறுமுகம் மற்றும் இரண்டு சிறுவர்களை பிடித்து விசாரணை நடத்தினர். மேலும் சிறுமியின் தாய் சேதுபாவாசத்திரம் போலீசில் அளித்த புகாரின் பேரில், போக்சோ சட்டத்தின் கீழ், கூட்டு பாலியலில் ஈடுபட்ட சிறுவர்கள் உட்பட ஐந்து பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து, ஐந்து பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
பேராவூரணியை சேர்ந்த 16 வயது சிறுமிக்கு கூட்டு பாலியல் தொல்லை அளித்த குற்றத்தில் ஈடுபட்ட சந்தோஷ் (24), அரவிந்த் (வயது 20), ஆறுமுகம் (வயது 18), மற்றும் 17,15 வயது சிறுவர்கள் என ஐந்து பேரை போக்சோவில் போலீசார் கைது செய்தனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்