“ஐந்து மாதங்கள் திட்டமிட்டு தந்தையை கொன்ற சிறுவன்” - அடுத்தடுத்து மூவரை கொலை செய்த கொடூரம்.. வெப் சீரிஸ் பார்த்து செய்ததாக வாக்குமூலம்!

நான்கு சடலங்களை காரின் பின் சீட்டில் போட்ட சிறுவன் வீட்டில் இருந்து 500 அடி தூரத்துக்கு...
“ஐந்து மாதங்கள் திட்டமிட்டு தந்தையை கொன்ற சிறுவன்” - அடுத்தடுத்து மூவரை கொலை செய்த கொடூரம்.. வெப் சீரிஸ் பார்த்து செய்ததாக வாக்குமூலம்!
Published on
Updated on
2 min read

ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூர் அடுத்துள்ள அஜ்மீர் பகுதியை சேர்ந்த ஸ்ரீராம்பூரா கிராமத்தை சேர்ந்தவர் சர்பஜ் ராம் சிங். இவருக்கு திருமணமாகி இரண்டு மாணவிகள் உள்ள நிலையில், ராம் சிங் தனது தாய், இரண்டு மனைவிகள், மருமகள் மற்றும் முதல் மனைவியில் பிள்ளைகள் என அனைவருடனும் ஒரே வீட்டில் வசித்து வந்திருக்கிறார். ஆனால் இரண்டாவது மனைவி சுர்ஜின் வந்ததில் இருந்து ராம் சிங் முதல் மனைவியை சரியாக கவனிக்காமல் மரியாதை இன்றி நடத்தி வந்ததாக சொல்லப்படுகிறது.

இதனை தொடர்ந்து கவனித்து வந்த ராம் சிங்கின் 17 வயதுடைய மகனுக்கு தந்தையின் மீது வெறுப்பு ஏற்பட்டுள்ளது. எனவே அவரை கொலை செய்ய முடிவு செய்த அந்த சிறுவன் கடந்த 5 மாதங்களாக தடையும் இன்றி கொலை செய்வதற்கு வெப் சீரியஸ் மற்றும் கேம் விளையாடி பயிற்சி எடுத்து வந்திருக்கிறார். இந்நிலையில் கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு ராம் சிங் மற்றும் அவரது இரண்டாவது மனைவி சுர்ஜின் ஆகிய இருவரும் சேர்ந்து ஒன்றாக பீர் அறுத்துவிட்டு உறங்க சென்றிருக்கின்றனர். இது தான் கொலை செய்ய சரியான நேரம் என முடிவெடுத்த சிறுவன் தந்தையின் அறைக்கு சென்று அவரை கத்தியால் குத்தி கொலை செய்திருக்கிறார்.

அப்போது எதிர்பாராத விதமாக சிறுவன் கொலை செய்ததை சுர்ஜின் பார்த்த நிலையில் அச்சமடைந்த சிறுவன் அவரையும் கத்தியால் குத்தி கொலை செய்திருக்கிறார். அதனை தொடர்ந்து சுர்ஜினின் அலறல் சத்தம் கேட்டு அறைக்கு வந்த ராம் சிங்கின் தாய் மற்றும் மருமகளையும் சிறுவன் கொலை செய்த நிலையில் இதற்கு சிறுவனின் தாய் மற்றும் சகோதரி உடந்தையாக இருந்துள்ளனர். பின்னர் மூவரும் சேர்ந்து கொலை மறைக்க திட்டமிட்டுள்ளனர் அதன்படி நான்கு சடலங்களை காரின் பின் சீட்டில் போட்ட சிறுவன் வீட்டில் இருந்து 500 அடி தூரத்துக்கு காரை எடுத்து சென்று அங்கு கருடன் சேர்த்து பெற்றோ ஊற்றி எரித்துள்ளார்.

பின்னர் கார் எறிந்த நிலையில் இருப்பதாய் பார்த்த அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்த நிலையில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் காரில் இருந்த நான்கு உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து வழக்கு பதிவு செய்த போலீசார் ராம் சிங்கின் முதல் மனைவியிடம் விசாரித்த போது நால்வரும் மருத்துவமனைக்கு சென்ற நிலையில் இடையில் விபத்து ஏற்பட்டு இறந்ததாக கூறியுள்ளார். ஆனால் போலீசாருக்கு 17 வயது சிறுவன் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்ட நிலையில் சிறுவனுடன் தீவிர விசாரணை நடத்தியதில் அவர் தனது தந்தை உட்பட நால்வரையும் கொலை செய்து எரித்ததை ஒப்புக்கொண்டார்.

எனவே சிறுவனை கைது செய்த போலீசார் கொலைக்கு உடந்தையாக இருந்த சிறுவன் தாய் மற்றும் சகோதரியிடம் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் விசாரணையின் போது சிறுவன் தனது தந்தையை கொலை செய்ய ஐந்து மாதங்கள் திட்டமிட்ட தகவல் அறிந்து போலீசார் அதிர்ச்சியடைந்தனர். தொடர்ந்து சிறுவனின் போனை சோதனை செய்த போது அவர் தொடர்ந்து கொலை சம்மந்தமான படங்களை பார்த்து வந்தது தெரியவந்தது. 17 வயது சிறுவன் 5 மாதங்கள் திட்டமிட்டு தனது தந்தையை கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com