2025-ம் ஆண்டில் தனது 18 வயது மகளை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார், இதனால், அவரது மகள் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகேலா ரெனி செட்டில்ஸ் என்ற பெண், தனது உயிரியல் தந்தையான ஸ்டீபன் வின்சென்ட் சாவேஸால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக குற்றச்சாட்டின் பேரில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு நடத்தப்பட்ட பாலியல் வன்கொடுமைப் பரிசோதனைக் கருவியில் சாவேஸின் டிஎன்ஏ அவரின் உடலில் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து ஐந்து மாதங்களுக்குப் பிறகு செட்டில்ஸ் தற்கொலை செய்துகொண்டதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து, பாலியல் வன்கொடுமையைத் தொடர்ந்து சாவேஸ் கைது செய்யப்பட்டார். ஆனால் $250,000 பிணையில் விடுவிக்கப்பட்டார். அதன் பின்னர் அவர் மீது, மகளின் மீது செய்யப்பட்ட முறையற்ற பாலியல் உறவு, சிறாருக்கு மதுபானம் வழங்குதல் ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. மேலும் அவர் அனைத்து குற்றச்சாட்டுகளுக்கும் தான் குற்றமற்றவர் என்று வாதிட்டுள்ளார் என மாவட்ட வழக்கறிஞர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
"குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், அவருக்குக் கிடைக்கக்கூடிய அதிகபட்ச தண்டனை மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனையும், பதிவுசெய்யப்பட்ட பாலியல் குற்றவாளியாக 20 ஆண்டுகளும்தான்," என்று செட்டில்ஸின் உறவினரான கரோலினா சாண்டோவல், கூறியுள்ளார். வழக்கு விசாரணையின் நிலை குறித்து செட்டில்ஸின் குடும்பத்தினர் அதிருப்தி தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது, ஏனெனில் இந்த வழக்கு முழுமையான ஜூரி விசாரணைக்குச் செல்லுமா? என்பதை மாவட்ட வழக்கறிஞர் அலுவலகம் தெளிவுபடுத்தவில்லை. வழக்கைத் தொடர்ந்து நடத்தப்போவதாக அலுவலகம் கூறியிருந்தாலும், செட்டில்ஸின் மரணம் இந்த வழக்கில் உயிருள்ள சாட்சி இல்லாத நிலையை ஏற்படுத்தியுள்ளதாகவும், இதனால் இவ்வழக்கை முழுமையான விசாரணைக்குக் கொண்டு செல்வது மிகவும் கடினமாகிவிட்டதாகவும் அவரது குடும்பத்தினரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. செட்டில்ஸின் சொந்த சாட்சியம் இல்லாத நிலையில், டிஎன்ஏ ஆதாரம் மட்டுமே தண்டனை பெற்றுத் தருவதற்குப் போதுமானதாக இருக்குமா?என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.
மேலும், ஸ்டீபன் தன்னுடைய மகளுக்கு மது ஊட்டிவிட்டார் என்றும் அவர் போதையில் இருந்தார் என்றும் உடகாத்திடம் தெரிவித்துள்ளார். மேலும் ஸ்டீபன் தன் மகளை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் கடுமையான பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தியுள்ளார். எனவே, இது பலாத்காரம் இல்லையென்றால், வேறு எதுதான் பலாத்காரம் என்று எனக்குத் தெரியவில்லை என செட்டில்ஸில் உறவினர் ஆதங்கத்துடன் கூறியுள்ளனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.