"அம்மா சீக்கிரம் வாங்க... என்னைக் கொன்றுவாங்க!" - காதலியை பார்க்க சென்ற 19 வயது இளைஞர் அடித்துக் கொலை... தாயிடம் கூறிய கடைசி வார்த்தை!

காதலனை காப்பாற்ற முயன்ற அந்த இளம்பெண்ணையும் அவர்கள் சரமாரியாக தாக்கியதில்...
victim and girlfriend house
victim and girlfriend house
Published on
Updated on
1 min read

உத்தரப் பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த 19 வயதுடைய சிவபிரசாத் என்பவர், அதே பகுதியைச் சேர்ந்த இளம் பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் இருவரும் நெருங்கி பழகி வந்த நிலையில் இவர்களது பழக்கமானது காதலாக மாறியுள்ளது. தொடர்ந்து இருவரும் அடிக்கடி போனில் பேசிக்கொள்வது, ஒன்றாக வெளியில் சென்று வந்ததாக சொல்லப்படுகிறது. இந்நிலையில், சிவ பிரசாத் தனது காதலியை சந்திப்பதற்காக நள்ளிரவில் அவரது வீட்டுக்குச் சென்று காதலியின் அறையில் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்திருக்கிறார்.

அப்போது, எதிர்பாராத விதமாக அறைக்குள் சென்ற பெண்ணின் தந்தை ராகேஷ் ராஜ்புத் தனது மகளுடன் சிவபிரசாத் இருப்பதை பார்த்து ஆத்திரமடைந்திருக்கிறார். எனவே அவர் அவரது குடும்பத்தினர், சிவபிரசாத்தை பிடித்து தடிகள் மற்றும் கால்களால் சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. மேலும் காதலனை காப்பாற்ற முயன்ற அந்த இளம்பெண்ணையும் அவர்கள் சரமாரியாக தாக்கியதில், அவர் பலத்த காயமடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையில், உயிருக்கு போராடிக் கொண்டிருந்த சிவபிரசாத், நள்ளிரவு 12 மணியளவில் தனது தாயை செல்போனில் தொடர்புகொண்டு, "அம்மா... சீக்கிரம் வாங்க... ராகேஷ், சச்சின் உள்ளிட்டோர் என்னைக் கொன்று விடுவார்கள்" என்று கதறியுள்ளார். இதனை கேட்டு அச்சமடைந்த சிவபிரசாத்தின் தாய் உடனடியாக இதுகுறித்து அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவித்திருக்கிறார். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற உறவினர்கள் பலத்த காயமடைந்த சிவபிரசாத்தை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயன்ற நிலையில், வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

அதேநேரம், தாக்குதலில் காயமடைந்த இளம்பெண் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இது குறித்து விசாரணை நடத்தினர். மேலும், இந்த கொலை சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து, சம்பந்தப்பட்டவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காதலியை பார்க்க நள்ளிரவில் சென்ற 19 வயது இளைஞர், காதலியின் குடும்பத்தினரால் தாக்கப்பட்டு உயிரிழந்த இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com