“ச்சீ.. இந்த வயசுல இப்படியா?” - 20 வயது துப்புரவு பணியாளருக்கு தொடர் பாலியல் தொல்லை.. வீட்டுக்குள் அழைத்து அத்துமீறிய 50 வயது நபர்!

இது தொடர்பாக கடந்த 2 மாதங்களுக்கு முன்பு மாநகர நல அலுவலர் மற்றும் மாநகராட்சி துப்புரவு துறையில் பெண் பணியாளர் புகார் அளித்துள்ளார்.
“ச்சீ.. இந்த வயசுல இப்படியா?” - 20 வயது துப்புரவு பணியாளருக்கு தொடர் பாலியல் தொல்லை.. வீட்டுக்குள் அழைத்து அத்துமீறிய 50 வயது நபர்!
Published on
Updated on
1 min read

காரைக்குடி கே.எம்.சி., காலனியை சேர்ந்தவர் 20 வயது பெண் துப்புரவு பணியாளர் (முத்துமாரி). இவர் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட, சங்கராபுரம் ரோஜா வீதியில் உள்ள பகுதியில் துப்புரவு பணியில் ஈடுபட்டு வருகிறார். இன்று பணியில் ஈடுபட்டு கொண்டு இருந்தபோது அப்பகுதியை சேர்ந்த 50 வயது மதிக்கத்தக்க ராஜசேகர் என்ற  நபர் தொடர்ந்து 20 வயது பெண் துப்புரவு பணியாளருக்கு (அந்த பெண் வீட்டுக்குள் சென்று குப்பையை எடுக்கும் பொழுது அவரை பின்பக்கமாக கட்டிப்பிடித்து) பாலியல் ரீதியாக துன்புறுத்தி இரட்டை வசனத்தில் பேசி வந்ததாக கூறப்படுகிறது. அதை மறுத்ததை  தொடர்ந்து வீட்டுக்குள் வந்து குப்பையை வாங்க வேண்டும் என பெண் துப்புரவு பணியாளரை டார்ச்சர் செய்துள்ளார்.

இது தொடர்பாக கடந்த 2 மாதங்களுக்கு முன்பு மாநகர நல அலுவலர் மற்றும் மாநகராட்சி துப்புரவு துறையில் பெண் பணியாளர் புகார் அளித்துள்ளார். அவர்களும் இது தொடர்பாக நடவடிக்கை எடுப்பதாக கூறி, இதுவரை உரிய நடவடிக்கை எடுக்காமல், அந்த நபர் சைக்கோ என கூறி தட்டிக்கழித்து உள்ளனர். இந்நிலையில், அவர் வீட்டு அருகே உள்ள மற்றொரு தெருவில் இன்று குப்பை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது அங்கு சென்ற ராஜசேகர் அந்தப் பெண்ணை கையை பிடித்து தனது வீட்டிற்கு இழுத்ததாகவும், அதனைத் தொடர்ந்து அந்த பெண் கூச்சலிட்டு துப்புரவு பணியாளர்களின் மேஸ்திரிக்கு போன் மூலம் தகவல் தெரிவித்துள்ளனர்.

அதை தொடர்ந்து அங்கு கூடிய துப்புரவு பணியாளர்கள் ராஜசேகரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதன் பின்பு காரைக்குடி வடக்கு காவல் நிலையம் வந்த ராஜசேகர் மீது தொடர்ந்து இந்த பெண்ணிற்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வருவதாகவும் ஆபாசமாக சாதியை சொல்லி பேசுவதாகவும் புகார் அளித்துள்ளனர். இந்த சம்பவத்தால் துப்புரவு பணியாளர்கள் அனைவரும் பணியை விட்டுவிட்டு காவல் நிலையம் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com