“கடைக்கு வந்த இளம்பெண்” - தனிமையில் பேச சென்ற உரிமையாளர்.. போட்டோ எடுத்து மிரட்டிய காதலி!

தினேஷுக்கு “good morning” என மெசேஜ் செய்துள்ளார். தினேஷும் இளம் பெண் மெசேஜ் செய்யவே ரிப்ளை செய்துள்ளார். இப்படி இருவரும் மாறி மாறி மெசேஜ் செய்து கொண்டிருந்த நிலையில் இருவருக்கும் இடையில் நட்பு ஏற்பட்டுள்ளது.
karnataka news
karnataka news
Published on
Updated on
1 min read

கர்நாடக மாநிலம் பெரியபுரா பகுதிக்கு அருகில் உள்ள கம்பளபுராவில் துணிக்கடை வைத்து நடத்தி வந்தவர் தினேஷ். இவரது கடைக்கு வந்த 23 வயதான இளம் பெண் ஒருவர் புதிய கலெக்ஷன் உடைகளை உள்ளதா என கேட்டுள்ளார். இப்போதைக்கு இல்லை எனவும் அடுத்த வாரம் வந்து விடும் எனவும் தினேஷ் கூறியுள்ளார்.

அதற்கு பின் தினேஷிடம் அவரது எண்ணை வாங்கிக் கொண்டு திரும்பி சென்ற இளம் பெண் மறுநாள் காலை தினேஷுக்கு “good morning” என மெசேஜ் செய்துள்ளார். தினேஷும் இளம் பெண் மெசேஜ் செய்யவே ரிப்ளை செய்துள்ளார். இப்படி இருவரும் மாறி மாறி மெசேஜ் செய்து கொண்டிருந்த நிலையில் இருவருக்கும்  இடையில் நட்பு ஏற்பட்டுள்ளது.

ஒரு வாரம் சென்ற பிறகு தினேஷுக்கு போன் செய்த இளம்பெண் “எனக்கு உன்னை பிடித்திருக்கிறது நாம்  திருமணம் செய்து கொள்ளலாமா” என கேட்டுள்ளார். இதை பற்றி பேச தனது அத்தை வீட்டிற்கு தினேஷை அழைத்துள்ளார் இளம் பெண். எனவே தினேஷும் அவர் சொன்ன முகவரிக்கு சென்றுள்ளார்.

அப்போது இளம் பெண்ணுடன் இருந்த கும்பல் சிலர் இளம் பெண்ணையும் தினேஷையும் மிரட்டியம் சரமாரியாக தாக்கியும் இருவரும் நெருக்கமாக இருப்பது போன்ற புகைப்படங்களை எடுத்துள்ளனர். மேலும் தினேஷை அரைகுறை ஆடைகளுடன் போட்டோ எடுத்துள்ளனர். இவற்றை வைத்து தினேஷை மிரட்டிய கும்பல் அவரிடமிருந்த பணத்தையும் பறித்துக்கொண்டு “இங்கு நடந்ததை யாரிடமாவது சொன்னால் கொன்று விடுவோம்” என கூறி அனுப்பி வைத்துள்ளனர்.

அவர்களிடமிருந்து தப்பித்த தினேஷ் இதை பற்றி போலீசில் புகாரளித்துள்ளார்.புகாரை ஏற்று அந்த கும்பலை பிடித்து விசாரித்ததில் இந்த சம்பவத்திற்கு திட்டம் போட்டு கொடுத்ததே இளம் பெண் தான் என தெரிவந்துள்ளது. தினேஷை ஏமாற்றி பணம் பறித்த இளம் பெண் மற்றும் அவருக்கு உதவியாக இருந்த மூவரை கைது செய்துள்ளனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com