
ஹரியானா மாநிலம் சோனிபட் பகுதியை சேர்ந்தவர் ஷீத்தல். இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு சுனில் என்பவருக்கு சொந்தமான தனியார் விடுதியில் வேலை செய்து வந்துள்ளார். அப்போது சுனிலுக்கும் ஷித்தலுக்கும் இடையே காதல் ஏற்பட்டுள்ளது. இருவரும் ஒருவருக்கொருவர் காதலித்து வந்துள்ளனர்.
சுனில் மாடலிங் செய்து வந்துள்ளார். இதனால் மாடலிங் துறையில் ஆர்வம் ஏற்பட்ட நிலையில் ஷித்தாலும் மாடலிங் செய்ய தொடங்கியுள்ளார். மாடலிங் துறைக்கு சென்று வளர வளரத்தான் தன்னோடு சேர்ந்து மாடலிங் செய்யும் சில நண்பர்கள் மூலம் சுனில் ஏற்கனவே திருமணமானவர் என்றும். அவருக்கு இரண்டு குழந்தைகள் இருப்பதும் தெரியவந்துள்ளது.
இதில் அதிர்ச்சி அடைந்த ஷீத்தல் சுனில் உடனான காதலை கைவிட்டுள்ளார். பிறகு வீட்டில் தனக்கு பார்த்த மாப்பிளையுடன் திருமணம் நடந்த நிலையில் அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக ஷீத்தல் தனது கணவரை பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார். ஷீத்தலின் தாய் மற்றும் தந்தை சண்டிகரில் உள்ள பானிபட் கிராமத்தில் வசித்து வந்துள்ளனர்.
ஷீத்தல் மற்றும் அவரது தங்கை நேஹா இருவரும் சோனிபட்டில் தனியாக வீடு எடுத்து வசித்து வந்துள்ளனர்.கடந்த 14 ஆம் தேதி ஷீத்தல் ஒரு விளம்பர ஷூட்டிங்கிற்கு அகர் பகுதிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றுள்ளார். சிறிது நேரத்தில் நேஹாவிற்கு போன் செய்த ஷீத்தல் “என்னை சுனில் அடித்து துன்புறுத்துகிறான்” என கூறியுள்ளார். இதனால் பயந்த நேஹா இதுகுறித்து போலீசில் புகாரளித்துள்ளார்.
அன்று இரவு போலீசாருக்கு கார் ஒன்று விபத்தாகி நீரில் மூழ்கி கிடப்பதாக தகவல் கிடைத்துள்ளது. சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் காரை மீட்டு விசாரணை நடத்தியதில் அது ஷீத்தல் கார் என்பது விபத்திற்குள்ளான நபர் சுனில் என்பதும் தெரியவந்துள்ளது. பின்னர் சுனிலிடம் விசாரணை நடத்தியதில் தானும் ஷீத்தாலும் விளம்பரம் நடிக்க சென்று கொண்டிருந்த போது கார் விபத்துக்கு உள்ளாகி ஷீத்தல் ஆற்றில் மூழ்கிய நிலையில் சுனில் மட்டும் காருக்குள் மாட்டிக்கொண்டதாக கூறியுள்ளார்.
நீண்ட நேர தேடலுக்கு பின் ஷீத்தலின் உடலை மீட்ட காவல்துறையினர். உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்த நிலையில், பிரேத பரிசோதனையில் ஷீத்தல் கழுத்தை நெரித்ததால் உயிரிழந்துள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து போலீசார் சுனிலிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
விசாரணையில் “அகர் பகுதியில் விளம்பரம் நடிக்க சென்ற போது நான் ஷீத்தலை பார்த்தேன் அப்போது அவரிடம் தனியாக பேச வேண்டும் காரில் ஏற்றி சென்று. என்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டேன் அதற்கு ஷீத்தல் மறுத்ததால் ஆத்திரம் அடைந்து அவரை கழுத்தை நெரித்து கொன்று விட்டேன்” என கூறியுள்ளார். இதனால் சுனிலை கைது செய்த போலீசார் அவரை சிறையில் அடைத்துள்ளனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.