“ஆசிரியருடன் மாணவன் காதல்?.." 25,000 மெசஜ்கள் அனுப்பி பல மாதங்கள் உடலுறவு! நீதிமன்றத்தில் நடந்த உருக்கமான காட்சி

தன் ஆசிரியருடன் காதலில் இருப்பதாக நண்பர்களிடம் தற்பெருமை பேசியதாகவும் கூறப்படுகிறது.
Teacher sentenced to 12 years
Teacher sentenced to 12 years
Published on
Updated on
2 min read

தன் வகுப்பில் பயின்ற 15 வயது மாணவன் மீது 'தீவிர மோகம்' கொண்டிருந்த ஆசிரியர் அந்த பதின்மவயது மாணவனை பாலியல் வன்கொடுமை செய்ததற்காக, சிறப்பு கல்வி ஆசிரியரான அந்த குற்றச்சாட்டப்பட்ட ஆசிரியருக்கு 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டபோது, ​​அந்த மாணவன் நீதிமன்றத்தில் தனக்கு நடந்த கொடுமைகளை உணர்ச்சிப்பூர்வமான வாக்குமூலமாக அளித்த நிலையில், அந்த ஆசிரியர் விம்மி அழுத்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

அமெரிக்காவில் உள்ள ஒரு இடைநிலைப் பள்ளியில் 45 வயதான முன்னாள் ஆசிரியை அலிசன் ஹேவ்மேன்-நீட்ராச் பணியாற்றி வந்தார். மேலும், அவர் பதின்மவயது மாணவனை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதை அடுத்து வெள்ளிக்கிழமை அன்று நீதிபதி தீர்ப்பை வழங்குவதற்கு முன்பு, பாதிக்கப்பட்ட அந்த சிறுவன் உணர்ச்சிப்பூர்வமாக தனக்கு நடந்த கொடுமைகளை அறிக்கையாக அளித்தபோது அந்த ஆசிரியர் கதறி அழுதுள்ளார்.

அடையாளம் வெளியிடப்படாத அந்த மாணவர், ஆசிரியருடனான தனது பல மாத கால உறவானது தனக்கு "ஒரு கெட்ட கனவு போல" இருந்ததாகவும், அதே போன்ற அனுபவத்தை வேறு யாரும் அனுபவிக்கக் கூடாது என்றும் தெரிவித்துள்ளார். “இரண்டு மூன்று ஆண்டுகளாக, அது என் தவறு என்று நான் நினைத்தேன்,” என்று அந்த நீதிமன்றத்தில் அந்த மாணவர் மனம் நொந்து பேசினார்.

மேலும் பேசிய மாணவர், “ஆசிரியர் செய்ததை நான் மன்னிக்கிறேன்,” என்று கூறியதும், அந்த முன்னாள் ஆசிரியர் கண்ணீர் விட்டு நீதிமன்றத்தில் கதறி அழுதுள்ளார். ஹேவ்மேன்-நீட்ராச் அந்தப் பதின்மவயது மாணவன் மீது ‘தீவிர மோகம்’ கொண்டிருந்தார் என்று அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, “எனது செயல்களுக்காக நான் மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்கிறேன்,” என்று ஹாவ்மன்-நீட்ராச் தனது சொந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இரண்டு பிள்ளைகளின் தாயான ஹேவ்மேன்-நீட்ராச், 2024-ம் ஆண்டில் ஆறு மாத காலத்திற்கு, எட்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த அந்த சிறுவனை பாலியல் ரீதியாகத் துன்புறுத்திய குற்றத்தை ஜனவரி மாதம் ஒப்புக்கொண்டுள்ளார். அந்த ஆசிரியர், அந்த சிறுவனிடம் தகாத முறையில் நடந்து கொண்டதையும், அருவருக்கத்தக்க செயலில் ஈடுபட்டதையும் மற்றொரு ஆசிரியர் கண்டதாக புகார் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, பள்ளியின் துணை முதல்வர் அந்த ஆசிரியருக்கும் அந்த இளைஞனுக்கும் இடையிலான உறவு குறித்துக் கவலை தெரிவித்ததை அடுத்து, ஜாக்சன் டவுன்ஷிப்பைச் சேர்ந்த அந்தப் பெண்ணிடம் அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். மேலும், அந்த மாணவனின் தாய், தனது மகன் ஆசிரியரின் காரில் நீண்ட நேரம் அமர்ந்திருப்பதையும், இரவு வெகு நேரம் வரை அந்த சிறுவன் கைப்பேசியில் பேசிக்கொண்டிருப்பதை சிறுவனது சகோதரி பார்த்த பிறகு, தன் மகனைப் பற்றி தனக்கு மிகுந்த கவலை ஏற்பட்டதாக அந்தச் சிறுவனின் தாய் புலனாய்வாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

ஹேவ்மேன்-நீட்ராச் இறுதியில் அந்த மாணவருக்கு 25,000 செய்திகளை அனுப்பியுள்ளார் என்றும் கூறப்படுகிறது. மேலும், தன் ஆசிரியருடன் காதலில் இருப்பதாக நண்பர்களிடம் தற்பெருமை பேசியதாகவும் கூறப்படுகிறது. இறுதியில் இந்த விஷயத்தை குறித்து அறிந்த அந்த சிறுவனின் தாய் தனது மகனை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றபோது, ​​அந்தப் பாலியல் வக்கிர குணம் கொண்ட ஆசிரியருடன் தான் உடலுறவு கொண்டதை அந்த மாணவன் காவல்துறையினரிடம் ஒப்புக்கொண்டுள்ளார். இதனையடுத்து, மாநில உயர் நீதிமன்ற நீதிபதி குற்றவாளியான ஹேவ்மேன்-நீட்ராக்கிற்கு சிறைத் தண்டனை விதித்தார்.

தன் தாயிடம் அந்த உறவை குறித்து வெளிப்படுத்துவதற்கு முன்பு, அந்த பாலியல் துன்புறுத்தல் காரணமாக அந்தச் சிறுவன் தற்கொலை செய்துகொள்ளும் எண்ணம் கொண்டிருந்ததாக நீதிபதி நீதிமன்றத்தில் கூறினார். குற்ற ஒப்புதல் ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, ஹேவ்மேன்-நீட்ராச் தனது தண்டனையின் குறைந்தபட்சம் 85% பகுதியை அனுபவிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும், அந்த ஆசிரியர் பதிவு செய்யப்பட்ட பாலியல் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டதுடன், அவரது ஆசிரியர் சான்றிதழ்களும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பாதிக்கப்பட்டவரையோ அல்லது அவரது குடும்பத்தினரையோ இனி ஒருபோதும் தொடர்பு கொள்ளக்கூடாது என்றும் நீதிபதி ஹேவ்மேன்-நீட்ராக்கிற்கு கடுமையாக உத்தரவிட்டுள்ளார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com