“சடலத்தை நிர்வாணமாக்கி வீதியில் வீசிய கொடூரம்” - மதுரை சிறுவன் கொலையில் வெளிவந்த பகீர் உண்மை.. கைது செய்யப்பட்ட 5 குற்றவாளிகள்!

ஆத்திரமடைந்த முத்துமணி தனது காயம் ஆறுவதற்குள் சிறுவன் குபேந்திரனை கொலை செய்துவிட...
“சடலத்தை நிர்வாணமாக்கி வீதியில் வீசிய கொடூரம்” - மதுரை சிறுவன் கொலையில் வெளிவந்த பகீர் உண்மை.. கைது செய்யப்பட்ட 5 குற்றவாளிகள்!
Published on
Updated on
2 min read

மதுரை மாவட்டத்தில், மீனாட்சி அம்மன் கோவில் அருகே உள்ள வடக்கு ஆவணி மூல வீதி பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான கார் பார்க்கிங் செயல்பட்டு வருகிறது. இப்பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவு நின்றுகொண்டிருந்த வடக்கு மாசி பகுதியை சேர்ந்த குபேந்திரன் என்ற சிறுவனை பைக்கில் வந்த மர்ம கும்பல் ஒன்று சரமாரியாக வெட்டி படுகொலை செய்து விட்டு தப்பியோடினர். இதனை பார்த்த அப்பகுதி மக்கள் நடந்தது குறித்து போலீசாருக்கு தகவல் அளித்த நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சிறுவனின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்ததை தொடர்ந்து  இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.  

இதில் கடந்த மாதம் சித்திரை திருவிழாவின் போது கொல்லப்பட்ட சிறுவன் குபேந்திரன் தனது நண்பர்களுடன் கழிவறைக்கு சென்றபோது அங்கு வந்த முத்துமணி மீது எதிர்பாராமல் உரசியுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு  ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கி கொண்டு தகராறில் ஈடுபட்ட நிலையில் குபேந்திரன் அடித்ததில் முத்துமணிக்கு காதில் காயம் ஏற்பட்டு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த  முத்துமணி தனது காயம் ஆறுவதற்குள் சிறுவன் குபேந்திரனை கொலை செய்துவிட வேண்டும் என திட்டம் தீட்டியுள்ளனர்.

Admin

அதன்படி நேற்று முன்தினம் இரவு  சிறுவன் குபேந்திரன் மீனாட்சியம்மன் கோவில் கார் பார்க்கிங் வணிக வளாகத்தில் மேல்மாடிக்கு நண்பர் ஒருவருடன் சென்றுள்ளார். அப்போது அங்கு 2 பைக்குகளில் வந்த முத்துமணி மற்றும் அவனது தம்பி ராஜ் மற்றும் சதீஷ்குமார் ,ஹரி கிருஷ்ணன், முத்துக்குமார் ஆகிய 5 பேர் கொண்ட கும்பல் கார் பார்க்கிங் மேல் வைத்து குபேந்திரனை சரமாரியாக  வெட்டியுள்ளனர். இதில் குபேந்திரன் ஓட முயற்சித்த போதும் விடாமல்   விரட்டி வெட்டியுள்ளனர். பின்னர் கழுத்தில் வெட்டி தலைமுடியை பிய்த்து எடுத்து 57 இடங்களில் கொடூரமாக வெட்டி படுகொலை செய்துள்ளனர். 

இதையடுத்து குபேந்திரனின் உடலை நிர்வாணமாக்கி கையில் தூக்கியபடி மேலிருந்து கீழே போட்டு விட்டு தப்பியோடியுள்ளனர்.இதனால் சம்பவ இடத்திலயே குபேந்திரன் உயிரிழந்த பின்னர் கொலை செய்த கும்பலானது அங்கிருந்து  தப்பியோடியது தெரியவந்துள்ளது. இதனைத்தொடர்ந்து விளக்குத்தூண் காவல்துறையினர் கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய மதுரை திடீர் நகரை சேர்ந்த  முத்துமணி 28 மற்றும் அவனது உடன் பிறந்த தம்பி ராஜ் 26 மதுரை மேலவாசல் பகுதியை சேர்ந்த  சதீஷ்குமார் வயது 28, வடக்கு மாசி வீதியை சேர்ந்த  ஹரிகிருஷ்ணன்  18, மற்றும் திடீர் நகர் பகுதியை சேர்ந்த முத்துக்குமார் 19 ஆகியோரை கைது செய்தனர்.  

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com