"பக்கத்துக்கு வீடு பெண்ணுடன் கள்ள உறவு.." கையும் களவுமாக சிக்கிய கணவன்! கள்ள காதலுக்காக எல்லை மீறிய இராணுவ வீரர்

பக்கத்து வீட்டில் வசிக்கும் ஒரு பெண்ணுடன் பகவத் கள்ள உறவில் இருந்தது அவரது மனைவிக்கு தெரியவந்துள்ளது.
Extramarital affair dispute
Extramarital affair disputeExtramarital affair dispute
Published on
Updated on
1 min read

திருமணத்திற்குப் புறம்பான உறவு குறித்து தனது கணவரிடம் கேள்வி எழுப்பியதால், ​​26 வயதான பெண் ஒருவர் இரும்புக் கம்பியால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சத்துவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய ராணுவத்தில் பணியாற்றும் அவரது கணவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் கர்நாடகாவின் பீதர் மாவட்டம், பால்கி தாலுக்காவில் உள்ள ஹொன்னிகேரி வனப்பகுதியில் நிகழ்ந்துள்ளது. உயிரிழந்தவர் பீதர் தாலுக்காவின் ஹொன்னிகேரி கிராமத்தைச் சேர்ந்த சஞ்சனா எனவும், குற்றம் சாட்டப்பட்ட பகவத் ஞானேஷ்வர் பால்கி தாலுக்காவின் போலேகான் கிராமத்தைச் சேர்ந்தவர் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இந்த தம்பதியினருக்கு திருமணம் ஆகி, பீதரில் உள்ள சிவனகரில் வசித்து வந்ததாக காவல்துறையினரும் குடும்பத்தினரும் தெரிவித்துள்ளனர்.

நன்றாக போய்க்கொண்டிருந்த திருமண வாழ்க்கையில் ஒருநாள் ஒரு அதிர்ச்சியளிக்கும் சம்பவம் வெளியே தெரியவந்தது. அதுதான், பக்கத்து வீட்டில் வசிக்கும் ஒரு பெண்ணுடன் பகவத் கள்ள உறவில் இருந்தது அவரது மனைவிக்கு தெரியவந்துள்ளது. இதனையறிந்த சஞ்சனா கணவனின் கள்ளஉறவிற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் அது அடிக்கடி சண்டைகளுக்கு வழிவகுத்ததாகவும் கூறப்படுகிறது. பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர் கூறுவதன்படி, ஜூன் 25 அன்று, பகவத் என்பவர் சஞ்சனாவை பிரார்த்தனை செய்வதாகக் கூறி பால்கி தாலுக்காவில் உள்ள மைலர் மல்லண்ணா கோவிலுக்கு காரில் அழைத்துச் சென்றுள்ளார்.

திரும்பி வரும் வழியில், ஹொன்னிகேரி வனப்பகுதியில் உள்ள ஜகதேஸ்வரி மடம் அருகே காரை நிறுத்தி, இரும்புக் கம்பியால் அவரது தலை மற்றும் கழுத்தில் பகவத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து, சஞ்சனா படுகாயங்களுடன் மகாராஷ்டிராவின் சோலாபூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார். ஆனால், அங்கு அவர் திங்கள்கிழமை மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும், அவரது உடல் பீதருக்குக் கொண்டுவரப்பட்டு, பிரேதப் பரிசோதனைக்காக செவ்வாய்க்கிழமை BRIMS சவக்கிடங்கில் வைக்கப்பட்டது. இதனை தன்னூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, மேலதிக விசாரணை தற்போது நடைபெற்று வருகிறது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com