"தாயையும் மகளையும் கர்ப்பமாக்கிய காதலன்.." ஒரே வீட்டில் இருக்கும் முக்கோண காதல்! சமூகவலைத்தளத்தில் விவாதத்தை கிளப்பிய 'லவ் ஸ்டோரி'

இருவரும் தனது குழந்தைகளுடன் கர்ப்பமாக இருப்பதாக சமூகவலைத்தளத்தில் அறிவித்து இணையத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கினார்.
Viral pregnancy claim
Viral pregnancy claimViral pregnancy claim
Published on
Updated on
2 min read

தனது காதலியையும் அவரது தாயையும் கர்ப்பமாக்கியதாகக் கூறிவந்த ஒரு அமெரிக்க யூடியூபர், அவர்களின் "கர்ப்பம்" குறித்த அறிவிப்பு பற்றி உண்மையை ஒப்புக்கொண்டுள்ளார். ஆனாலும், தங்களுக்குள் இருக்கும் மும்முனை உறவு உண்மையானது என்று அவர் தொடர்ந்து வலியுறுத்தியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

29 வயதான நிக் யார்டி, தனது 22 வயதான காதலி ஜேட் மற்றும் அவரது தாயார், 44 வயதான டானி ஆகிய இருவரும் தனது குழந்தைகளுடன் கர்ப்பமாக இருப்பதாக சமூகவலைத்தளத்தில் அறிவித்து இணையத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கினார். லட்சக்கணக்கான பார்வைகளைக் குவித்துள்ள அந்த வீடியோ, பல லட்சம் பார்வையாளர்களை கடந்தது. இது சமூகவலைத்தளத்தில் மிகப்பெரிய விவாதத்தை எழுப்பியது. சிலர் இதை அருவறுப்போடு பார்த்தனர், மற்றும் சிலர் இதனை வெறுப்போடு பார்த்தனர். இந்த வீடியோ வெளியான கொஞ்ச நாளில், "அதில் குழந்தைகள் இல்லை. அது வெறும் ஒரு நகைச்சுவைக் காட்சி. அது உண்மையில் நடந்ததல்ல," என்று அவர் இணையதளத்தில் பதிவிட்டார்.

மேலும், இது குறித்து பேசிய அவர்,"என்னைப் பின்தொடர்பவர்கள் வெறும் பொழுதுபோக்கைத் தேடுகிறார்கள், அவர்கள் அதை உண்மையாக நம்புகிறார்கள் என்று நான் நினைக்கவில்லை". அவருடைய சொந்த ரசிகர் பட்டாளம் இந்தக் குழந்தைச் செய்தியை அவ்வளவாக நம்பவில்லை என்றாலும், நிக், ஜேட் மற்றும் டானியின் எண்ணற்ற சமூக ஊடகப் பக்கங்களில் அந்த அறிவிப்பு பகிரப்பட்ட பிறகு, பலர் அதை நம்பி ஏமாந்தனர்.

"நானும் என் அம்மாவும் ஒரே ஆணுக்கு இரண்டு வார இடைவெளியில் ஒரு குழந்தையை வரவேற்கிறோம்" என்று ஜேட் டிக்டாக்கில் பதிவிட்ட காணொளி, பரவலான விவாதத்தை இணையதளத்தில் உருவாக்கியது. பலர் இந்தச் சூழ்நிலையின் பின்விளைவுகளைக் கண்டித்தனர். “அது முறையற்ற உறவு,” என்றும் சிலர் கருத்துக்களை பதிவிட்டனர். ஜேட் மற்றும் டானி இருவரும் ஒன்லிஃபேன்ஸ் கிரியேட்டர்கள் என்பதையும், சுய விளம்பர நம்பிக்கையில் வரம்புகளை மீறுவதற்காகப் பிரபலமாகி வரும் ஒரு ஆபாசத் தொழில் செய்பவர்கள் என்ற கருத்துக்களும் உலா வந்தனர்.

நிக்கோலஸ் ஹண்டர், ஜேட் மற்றும் டானி தனது குழந்தைகளைச் சுமக்கவில்லை என்றாலும், கடந்த இரண்டு ஆண்டுகளாக அவர்கள் உண்மையாகவே ஒரு மும்முனை உறவில் இருந்து வருவதாக தெரிவித்தார். "அவர்கள் உண்மையில் தாயும் மகளும்தான், எங்களுக்கிடையிலான உறவும் உண்மையானது. ஆனால், அவர்கள் இன்னும் கர்ப்பமாக இல்லை. குறைந்தபட்சம் இப்போதைக்கு இல்லை," என்று அவர் தெரிவித்தார். அவரது யூடியூப் கணக்கில் உள்ள வீடியோக்கள், அந்த மூவரும் மியாமியில் உள்ள அவர்களது வீட்டில் இருப்பதைக் காட்டுகின்றன. தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்ட ஒரு வீடியோவின்படி, நிக் முதலில் ஜேடுடன் உறவில் இருந்ததாகவும், பின்னர் அவர்களுக்குள் ஒரு "சிரமமான காலகட்டம்" ஏற்பட்டபோது, ​​ஆலோசனைக்காக ஜேடின் வாழ்க்கை வழிகாட்டியான தாயை நாடியதாகவும் தெரியவந்துள்ளது. “இன்னொரு பெண்ணை” உள்ளே கொண்டு வர முயற்சி செய்யலாம் என்று டானி பரிந்துரைத்த பிறகு, அது அவரது தாயாகத்தான் இருக்க வேண்டும் என்று நிக் கூறியதாக கூறப்படுகிறது. இதில், ஆச்சரியப்படும் விதமாக, ஜேடும் அதற்குச் சம்மதித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com