

சென்னை, புளியந்தோப்பு கே.எம். கார்டன் பகுதியில் வசித்து வருபவர் 76 வயதான மூதாட்டி கமலா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) இவருக்கு நான்கு மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். கடந்த சில வருடங்களுக்கு முன்பு இவரது கணவர் உயிரிழந்த நிலையில் நான்கு மகன்களுக்கும் கமலா தனியாக இருந்து திருமணம் செய்து வைத்திருக்கிறார். பின்னர் நான்கு மகன்களும் சேர்ந்து மகள் கீதாவிற்கு திருமணம் செய்து வைத்த நிலையில் பிள்ளைகள் அனைவரும் குடும்பத்துடன் தனித்தனியாக வசித்து வருகின்றனர். எனவே மூதாட்டி தனியாக வசித்து வருகிறார்.
கீதா தனது கணவருடன் புரசைவாக்கத்தில் வாழ்ந்து வருவதால் தினமும் மாலை நேரத்தில் புளியந்தோப்பில் தனியாக உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்று அவருக்கு தேவையான உதவிகளை செய்து வந்திருக்கிறார். இந்நிலையில் வழக்கம் போல் நேற்று முன்தினம் (ஏப் 27) மாலை கீதா தாய் வீட்டிற்கு சென்று அவரை குளிக்க வைக்க சென்ற போது, கமலாவின் பிறப்புறுப்பில் இருந்து ரத்தம் வருவதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். உடனே தாயிடம் இது குறித்து கேட்டபோது கடந்த (ஏப் 26) ஆம் தேதி மாலை வீட்டில் தனியாக இருந்த சமயத்தில் அதே பகுதியை சேர்ந்த 57 வயதான பிளம்பர் மருதப்பன் என்பவன் வீட்டில் புகுந்து தன்னை பாலியல் பலாத்காரம் செய்து விட்டு தப்பி ஓடி விட்டதாக தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து மூதாட்டியைதாயை எழும்பூரில் உள்ள தாய்சேய் நல அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்ற அவரது மகள் கீதா இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் நடந்தது குறித்து மேற்கொண்டு மருதப்பன் மீது வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய அவரை தனிப்படை அமைத்து கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் மருதப்பன் மீது வேறு ஏதேனும் புகார் உள்ளதா என்பது குறித்தும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மூதாட்டி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று நிலையில் அரசு சார்பில் அவருக்கு தேவையான உதவிகளை காவல்துறையினர் செய்து வருவது குறிப்பிடத்தக்கது. வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி அதே பகுதியை சேர்ந்த 57 வயதுடைய நபரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும் அப்பகுதி மக்கள் பாதுகாப்பு நடவடிக்கையாக அப்பகுதியில் சிசிடிவி கேமரா அமைக்க வேண்டும் என போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.