'மசாஜ் சென்டர்' என்ற பெயரில் இயங்கிய 'விபச்சார விடுதிகள்!' வாடிக்கையாளர் போன்று சென்ற போலீஸ்.. கையும் களவுமாக சிக்கிய ஊழியர்கள்

ஒவ்வொரு அழகு நிலையத்திற்கும் காவல்துறையில் இருந்து ஒரு போலி ஆள் அனுப்பப்பட்டதாக காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.
California massage parlour raid
California massage parlour raid
Published on
Updated on
1 min read

அமெரிக்காவின் சான் கேப்ரியல் பள்ளத்தாக்கில் போலீசாரால் நடத்தப்பட்ட ஒரு ரகசிய நடவடிக்கையைத் தொடர்ந்து, சட்டவிரோத பாலியல் நடவடிக்கைகள் நடந்ததாகச் சந்தேகிக்கப்பட்ட பல மசாஜ் நிலையங்களை காவல்துறை மூடியுள்ளது. மேலும், அதில் ஊழியர்களாக வேலை செய்த பலரையும் காவல்துறை கைது செய்துள்ளது.

கோவினா காவல் துறை அதிகாரிகள், சட்டவிரோத பாலியல் தொழில் நடத்தியதன் பேரில் ஏழு வணிக நிறுவனங்களை முடக்கி, ஏழு பேரைக் கைது செய்துள்ளனர். மேலும், கைவிலங்கிடப்பட்ட சந்தேக நபர்களின் புகைப்படம் மற்றும் அந்த கூடங்களின் உட்புறக் காட்சிகள் அடங்கிய பதிவையும் அவர்கள் பகிர்ந்துள்ளனர். ரகசிய நடவடிக்கையின் ஒரு பகுதியாக ஒவ்வொரு அழகு நிலையத்திற்கும் காவல்துறையில் இருந்து ஒரு போலி ஆள் அனுப்பப்பட்டதாக கோவினா காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. ஒரு காவல்துறை ஊழியர் மசாஜ் சென்டர் என்ற பெயரில் இயக்கிய இடத்திற்கு சென்று நிலையில் அந்த ஊழியர்கள் கேட்டுக்கொண்டதன் பெயரில் பாலியல் செயல்களில் ஈடுபட ஒப்புக்கொண்டதாகக் கூறப்பட்டதை அடுத்து, காவல்துறையினர் உடனடியாக உள்ளே வந்து தங்களது நடவடிகளைகளை ஏற்றுக்கொண்டனர்.

மேலும், மசாஜ் செய்துகொண்டிருந்த அப்பகுதியை சேர்ந்த குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு சட்டவிரோத பாலியல் செயல்கள் நடந்த நிலையில் கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த இடங்கள் பெயரிடப்பட்ட வணிக நிறுவனங்கள் அல்ல என்பதும் விசாரணையில் தெரியவந்தது. சட்டவிரோத நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தவும், நகரத்தில் செயல்படும் வணிகங்கள் சட்டத்திற்கு இணங்குவதை உறுதி செய்யவும் காவல்துறை தொடர்ந்து பணியாற்றி வருவதால், இந்த வழக்குகள் தொடர்ந்து விசாரணையில் வைத்துள்ளதாக காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com