

செங்குன்றம் அடுத்த மொண்டியம்மன் நகர் பகுதியை சேர்ந்தவர் ரத்தினவேல் பாண்டியன் (32). இவர் எலக்ட்ரீஷியன் ஆக வேலை செய்துவந்துள்ளார். இவரை மொண்டியம்மன் நகர், வ.உ.சி தெருவில் உள்ள தனியார் பள்ளி அருகே இருசக்கர வாகனத்தில் சென்றபோது அவரை வழிமறித்த இருவர் சரமாரியாக அரிவாளால் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தகவல் அறிந்து வந்த செங்குன்றம் காவல்துறையினர் வெட்டுப்பட்டு கிடந்த ரத்தினவேலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டபோது, கொலை செய்யப்பட்ட ரத்தினவேலு கடந்த சில மாதங்களாக தனது மனைவியை விட்டு பிரிந்து மனைவியின் அண்ணன் மனைவியுடன் திருமணத்தை மீறிய உறவில் இருந்து வந்தது தெரியவந்துள்ளது. இதனை உறவினர்கள் பலமுறை கண்டித்தும் ஏற்காத நிலையில் ரத்தினவேலு மனைவியின் அண்ணன்கள் இருவர் சேர்ந்து ரத்தினவேலுவை 19.08.2026 அன்று காலைரத்தினவேலுவை பின் தொடர்ந்து வ.உ.சி தெருவில் உள்ள பல் தனியார் பள்ளி அருகில் சரமாரியாக வெட்டிக்கொலை செய்து தப்பியது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி தலைமையிலான தனிப்படை போலீசார் குற்றவாளிகளை பிடிக்க களத்தில் இறங்கியுள்ளனர். கொலை செய்துவிட்டு வெளியூருக்கு தப்ப முயன்ற ரத்தினவேலுவின் மனைவியின் சகோதரர்களான சரவணன், தனசேகர் மற்றும் அவர்களின் உறவினர் பழனிசாமி ஆகிய மூவரையும் போலீசார் பிடித்து வந்து விசாரணை மேற்கொண்ட போது, கொலை செய்யப்பட்ட ரத்தினவேல் பாண்டியன், பூர்ணிமா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டு இரண்டு மகன்களோடு புழல் காவாங்கரையில் வசித்து வந்தது தெரியவந்துள்ளது. நாளடைவில் காதல் மனைவியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதன் காரணமாக அவரை பிரிந்துசென்றுள்ளார். இதனையடுத்து, தனது மனைவியின் அண்ணி சரண்யாவிடம் காதல் வயப்பட்டு அவருடன் கடந்த சில மாதங்களாக கணவன் மனைவியாக தனியாக மொண்டியம்மன் நகர் அருகே வசித்து வந்துள்ளார்.
இந்த விவகாரம் அறிந்த உறவினர்கள் பலமுறை ரத்தினவேலுடன் திருமணத்தை மீறிய உறவிலிருந்து வெளியே வர அவரை எச்சரித்துள்ளனர். ஆனால், அது எதையும் ரத்தினவேலு காதில் கேட்டபாடு இல்லை. காதல் திருமணம் செய்து கொண்டு இரண்டு குழந்தைகளையும் கொடுத்துவிட்டு தனது தங்கையின் வாழ்க்கையை கேள்விக்குறியாக்கிய ரத்தினவேலு, தனது மனைவியையும் தன்னிடம் இருந்து பிரித்து குடும்பத்தையே நாசமாக்கியதால் அவரை கொலை செய்ய பூர்ணிமாவின் அண்ணன் சரவணன் திட்டமிட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து தனது சகோதரர் தனசேகர், சித்தப்பா பழனிசாமி என்பவரும் கொலை செய்ய கூட்டு சேர்ந்து சரியான நேரத்திற்காக காத்திருந்து, அவரை நோட்டமிட்டு வ.உ.சி தெருவில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த ரத்தினவேல் பாண்டியனின் வாகனத்தின் மீது, அவர்களது இருசக்கர வாகனத்தை மோதி, இடித்து ரத்தினவேலுவை கீழே தள்ளியுள்ளனர். சரவணன் அவரது சித்தப்பா பழனிசாமி இருவரும் ஆத்திரத்தில் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் தலை கழுத்து ஆகிய பகுதிகளில் சரமாரியாக வெட்டிக் கொலை செய்ததுள்ளனர்.
இதனையடுத்து காவாங்கரையை சேர்ந்த சரவணன் (39), தனசேகர் (34), எண்ணூர் சேர்ந்த பழனிசாமி (45) ஆகிய மூவரை கைது செய்த செங்குன்றம் போலீசார், கொலைக்கு பயன்படுத்திய 2 கத்திகளையும், இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்து மூவரின் மீது வழக்கு பதிவு செய்து அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்