
நெல்லை மேலப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் காளிமுத்து. இவருக்கு திருமணமாகி 55 வயதில் ஜெயலட்சுமி என்ற மனைவியும், மகனும் உள்ளனர். கணவன், மனைவி, மற்றும் மகன் குடும்பமாக வசித்து வந்த சூழலில் காளிமுத்துவின் மகன் வேலைக்காக வெளியூருக்கு சென்றுள்ளார். இந்நிலையில் ஜெயலட்சுமியின் தந்தைக்கு உடல் நிலை பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
எனவே 78 வயதான வேலுவை அவரது மகள் ஜெயலட்சுமி தனது வீட்டிற்கு அழைத்து வந்து கவனித்த வந்துள்ளார். வேலுவுக்கு முயூடு வலிக்காக ஏற்கனவே ஒரு அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில் அவரால் சரியாக நடக்க முடியாமல் இருந்துள்ளது. மேலும் வேலு தற்போது கண்புரை அறுவை சிகிச்சை செய்து கொண்டுள்ளார். ஜெயலட்சுமி தனது தந்தையை நன்றாக கவனித்து வந்துள்ளார்.
இருப்பினும் வேலு தனது மகளிடம் தன்னை சரியாக பார்த்து கொள்ளவில்லை என்று அடிக்கடி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இருப்பினும் தந்தை என்பதால் ஜெயலட்சுமி இதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று காளிமுத்து ஜெயலட்சுமி இருவரும் காலை உணவு சாப்பிட நிலை காளிமுத்து வேலைக்கு கிளம்பி சென்றுள்ளார். பின்னர் ஜெயலட்சுமி தனது தந்தைக்கு உணவு வழங்கியுள்ளார்.
மாலை வீடு திரும்பிய காளிமுத்து வீடு பூட்டி இருந்த நிலையில் தனது மனைவி ஜெயலட்சுமிக்கு போன் செய்துள்ளார். ஆனால் போன் வீட்டிற்குள் இருந்துள்ளது அறிந்து கதவை உடைத்து பார்த்துள்ளார். அப்போது ஜெயலட்சுமி வீட்டில் தலை மற்றும் கை கால்களில் காயங்களுடன் சடலமாக இருந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த காளிமுத்து போலீசில் புகாரளித்துள்ளார்.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ஜெயலட்சுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். பின்னர் எப்போதும் வீட்டில் இருக்கும் தந்தை வேலு வீட்டில் இல்லாததால் போலீசாருக்கு வேலுவின் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து வேலுவை தேடிய போலீசார் அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் மகளை கொலை செய்ததை வேலு ஒப்புக்கொண்டுள்ளார். இதனால் போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர். வேலு ஏற்கனவே தனது தந்தையை கொலை செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. பெற்ற மகளை தந்தையே கொலை செய்தது அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.