“பாலியல் உறவு வைத்தால் தான் பூஜை நிறைவேறும்” - பெங்குளுரு பெண்ணை ஏமாற்றிய மாந்திரீகர்கள்!

“இந்த கோவிலுக்கு வாருங்கள் உங்கள் அனைத்து கஷ்டங்களும் சரியாகிவிடும் என்று கைபேசி எண்ணுடன் இருந்துள்ளது” இதை பார்த்த சுதா அந்த வீடியோவை நம்பி அதில் இருந்த எண்ணிற்கு போன் செய்துள்ளார். அப்போது எதிர் தரப்பில் இருந்து அருண் என்ற அர்ச்சகர் பேசியுள்ளார்
witches
witches
Published on
Updated on
1 min read

பெங்களூர் மாவட்டத்தை சேர்ந்த 38 வயதான பெண் சுதா.(பெயர் மாற்றப்பட்டுள்ளது) இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் அவரது கணவர் உயிரிழந்துள்ளார். பெரிதும் வசதி இல்லாத சுதா கிடைத்த வேலைகளை பார்த்துக் கொண்டு குழந்தைகளை வளர்த்து வந்துள்ளார். கணவன் இல்லாமல் குழந்தைகளை படிக்கவைக்க வளர்க்க மிகுந்த துயரங்களை அனுபவித்து வந்துள்ளார் சுதா. 

இந்நிலையில் அவர் போனை பார்த்து கொண்டிருக்கும் போது இன்ஸ்டாவில் ஒரு வீடியோவில் “இந்த கோவிலுக்கு வாருங்கள் உங்கள் அனைத்து கஷ்டங்களும் சரியாகிவிடும் என்று கைபேசி எண்ணுடன் இருந்துள்ளது” இதை பார்த்த சுதா அந்த வீடியோவை நம்பி அதில் இருந்த எண்ணிற்கு போன் செய்துள்ளார். அப்போது எதிர் தரப்பில் இருந்து அருண் என்ற அர்ச்சகர் பேசியுள்ளார். 

சுதாவிடம் பேசிய அருண் நீங்கள் நேரில் முதலில் கோவிலுக்கு வாருங்கள் என கூறியுள்ளார். இதனை தொடர்ந்து சுதா பெங்களுருவில் இருந்து கேரளாவிற்கு சென்றுள்ளார். அங்கு சுதாவை அமர வைத்து பூஜை செய்வது போல நடித்த அருண் “உங்கள் குழந்தைகளுக்கு யாரோ பில்லி சூனியம் வைத்துள்ளனர் அதை எடுத்தால்  தான் நீங்கள் நன்றாக இருக்க முடியும் எனவும் இந்த பூஜை செய்வதற்கு 24 ஆயிரம் பணம் தேவைப்படும் என கூறியுள்ளார்.

இதையடுத்து தனது வீட்டிற்கு சென்ற பெண்ணுக்கு வாட்ஸ் அப்பில் தொடர்பு கொண்ட அருண் இன்றிலிருந்தே பூஜையை தொடங்கி விடுவோம். இந்த பூஜைக்கு நீங்கள் “ தினமும் இரவில் நாங்கள் சொல்லும் உடையில் வீடியோ காலில்  வரவேண்டும்” என கூறியுள்ளார். அதே போல் சுதாவும் செய்துள்ளார். இறுதியாக பூஜை நிறைவுக்கு கட்டத்திற்கு வந்துவிட்டது கடைசி பூஜைக்கு நீங்கள் நேரில் வரவேண்டும் என கூறியுள்ளார். 

இதனை தொடர்ந்து சுதாவும் கேராவிற்கு மீண்டும் சென்றுள்ளார். அங்கு சுதாவிற்காக காத்திருந்த அருண் மற்றும் உன்னி தாமோதரன் ஆகிய இருவரும் சுதாவை பூஜை செய்ய வேண்டும் என காட்டு பகுதிக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு “நீ எங்களுடன் பாலியல் உறவு வைத்துக் கொண்டால் தான் பூஜை நிறைவு பெரும். முழு பலனும் கிடைக்கும்” என கூறியுள்ளனர்.

இதற்கு சுதா மறுக்கவே அவரை கீழே தள்ளி விட்டு இருவரும் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அவர்களிடமிருந்து தப்பித்து பெங்களூர் வந்த இதை பற்றி போலீசில் புகாரளித்த நிலையில் கர்நாடக போலீசார் கேரளா போலீசாரின் உதவியுடன் அருணை கைது செய்துள்ளனர், மேலும் தப்பி சென்ற உன்னி தாமோதரனை தேடி வருகின்றனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com