

ஆயுர்வேதிக் பிசியோதெரபி கிளினிக் என்ற பெயரில் இளம் பெண்களை ஈடுபடுத்தி பாலியல் தொழில். கேரளா மாநிலம் திருச்சூர் மாவட்டத்தைச் சேர்ந்த அனீஸ், அவருடன் இளம்பெண் ஒருவர் பொள்ளாச்சி பல்லடம் சாலையில் கேரளியம் ஆயுர்வேதிக் பிசியோதெரபி என்ற பெயரில் மசாஜ் சென்டர் ஒன்றை நடத்தி வருகிறார். இந்த கிளினிக்கிற்கு ஆன்லைன் வாயிலாக முன்பதிவு செய்யும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மசாஜ் சென்டரில் பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்து வருவதாக பொள்ளாச்சி மகாலிங்கபுரம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலை அடுத்து இன்று மகாலிங்கபுரம் காவல்துறையினர் வாடிக்கையாளர்களைப் போல அதிரடி ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அங்கு மூன்று இளம் பெண்கள் பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. மேலும் பாலியல் தொழில் வாடிக்கையாக நடந்து வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து அந்த பிசியோதெரபி கிளினிக் சென்டரில் பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்த சென்னை,சேலம், கோவை மாவட்டத்தைச் சென்ற மூன்று இளம் பெண்களை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் கேரளா மாநிலம் திருச்சூர் மாவட்டத்தைச் சேர்ந்த அனீஸ் மற்றும் அவருடன் இருக்கும் இளம் பெண் இருவரும் சேர்ந்து நடத்தி வந்த இந்த கிளினிக்கில் பிசியோதெரபி அக்குபஞ்சர் சிகிச்சை அளிக்கப்படும் என ஆன்லைன் வாயிலாக வாடிக்கையாளர்களை முன்பதிவு செய்து இளம் பெண்களை வைத்து பாலியல் தொழிலும் செய்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து மூவர் மீதும் வழக்குப்பதிவு செய்த போலீசார் ஒருவரை நீதிமன்ற காவலில் வைத்துள்ளனர். மற்ற இரு இளம் பெண்கள் காப்பகத்திற்கு அனுப்பி வைக்கபட்டுள்ளனர். மேலும் அக்குபஞ்சர் கிளினிக் நடத்தி வந்த உரிமையாளர் அனீஸ் என்பவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
மருத்துவ சிகிச்சை பெறும் ஆயுர்வேதிக் பிசியோதெரபி கிளினிக் போல செயல்பட்டு வந்த இடத்தில் பாலியல் தொழில் நடந்து வந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொது வெளியில் இப்படி மோசடி செயல் அரங்கேறி வந்ததும், 3 பெண்கள் ஈடுபடுத்தப்பட்டதும் மக்களிடையே அச்சத்தையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.