

திருத்தணி அருகே அரசு பள்ளியில் ஆறாம் வகுப்பு படிக்கும் 11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக போக்சோ வழக்கு பதிவு செய்துள்ளது திருத்தணி அனைத்து மகளிர் காவல் நிலையம்.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே அரசு பள்ளியில் ஆறாம் வகுப்பு படிக்கும் 11 வயது சிறுமிக்கு, பெற்ற தந்தையே பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து சிறுமியின் தாய் திருத்தணி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில் தனது கணவர், தன்னுடைய மகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக தெரிவித்துள்ளார்.
இதையடுத்து திருத்தணி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் மலர் அவர்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளார். இதில் தொடர்புடைய அந்த சிறுமியின் தந்தையான கூலி தொழிலாளி அண்ணாமலை (36), அவருடைய மகளுக்கு மது போதையில் பாலியல் தொல்லை அளித்ததை உறுதி செய்து போக்சோ வழக்கு பதிவு செய்துள்ளது. திருத்தணி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை மேற்கொண்ட பிறகு, திருவள்ளூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்து நீதிபதி உத்தரவின் பேரில் பெற்ற மகளுக்கு பாலியல் தொல்லை அளித்த அண்ணாமலையை புழல் சிறையில் போலீசார் அடைத்துள்ளனர்.
பெற்ற மகளுக்கே தந்தை பாலியல் தொல்லை கொடுத்த இந்த கொடூர செயல், பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. சிறுமிகள் எதிர்கொண்டு வரும் இந்த மாதிரியான மன உளைச்சல் மற்றும் பெண்கள் பாதுகாப்பு குறித்த பெரும் கேள்வியும் வருத்தமும் சமூகத்தில் தொடர்வதை காட்டியுள்ளது. மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்