கோவில் கிரிவலம் வந்த பெண்ணுக்கு பாலியல் சீண்டல்! காதலன் உட்பட 8 பேரின் வெறிச்செயல்.. திருவண்ணமலையில் பரபரப்பு!

கிரிவலப்பாதையில் உள்ள அடி அண்ணாமலை கிராமம் அருகே வரும் பொழுது
thiruvannamalai women case
Published on
Updated on
1 min read

திருவண்ணாமலை கோவிலுக்கு கிரிவலம் வந்த இளம் பெண்ணிற்கு பாலியல் தொந்தரவு. நகையை பறித்து கொண்டு பாலியல் தொல்லை கொடுத்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இது குறித்து ஏழு பேரிடம் காவல்துறை ரகசிய விசாரணை நடத்தி வருகிறது. 

திருவண்ணாமலை மாவட்டம், வேல்நகர் பகுதியைச் சேர்ந்த 23 வயதான இளம் பெண் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த 31 ஆம் தேதி, ஞாயிற்று கிழமை திருவண்ணாமலைக்கு தனியாக வருகை தந்துள்ளார். அன்று மாலையில் கிரிவலம் மேற்கொண்டுள்ளார். அப்போது கிரிவலப்பாதையில் உள்ள அடி அண்ணாமலை கிராமம் அருகே வரும் பொழுது தனது காதலனை செல்போனில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார், மேலும் அவரை சந்திக்க வர சொல்லியுள்ளார். அப்போது அந்த பெண்ணின் காதலன் மற்றும் இருவர் இருசக்கர வாகனத்தில் அடிஅண்ணாமலை ஏரிக்கரை பகுதியில் சந்திக்க வந்துள்ளனர்.

இந்நிலையில் 23 வயது இளம் பெண்ணிற்கு அவரது காதலன் மற்றும் சிலர் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. இதில் இளம் பெண்ணின் காதில் அணிந்திருந்த 2 கிராம் தங்க நகையை பறித்துக் கொண்டு காதலன் மற்றும் அவருடன் பலர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இது குறித்து பாதிக்கப்பட்ட இளம் பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் திருவண்ணாமலை மாநகராட்சிக்குட்பட்ட ஆடையூர் பகுதியைச் சேர்ந்த வாசு என்கிற வாசுதேவன் கைது செய்யப்பட்டு மேற்கு காவல் நிலையம் அழைத்து வரப்பட்டார். மேலும் இந்த சம்பவம் தொடர்புடைய 8 நபர்களை பிடித்து காவல்துறையினர் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மன அமைதிக்காக கிரிவலம் வரக்கூடிய ஆன்மீக பக்தர்கள் மத்தியில் கிரிவலம் வருகை தந்த பக்தர்களுக்கு 8 பேர் கொண்ட கும்பல் பாலியல் தொந்தரவு கொடுத்து நகை பறித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும் 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com