இது என்னங்க அநியாயம்..”மனநலம் பாதிக்கப்பட்டவரை போய்… “நடு ரோட்டில் அரங்கேறிய கொலை..!

மருத்துவமனை செல்லும் வழியிலேயே பாக்யராஜ் (39)உயிரிழந்தார். இச்சம்பவம் அறிந்த நாச்சியார் கோவில் காவல் நிலையத்தார்...
victim bhakiyaraj
victim bhakiyaraj
Published on
Updated on
1 min read

கும்பகோணம்” நாச்சியார் கோவில் அருகே மன நலம் பாதிக்கப்பட்டவரை கட்டையால் அடித்ததில் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கும்பகோணம் அருகே நாச்சியார்கோவில் கடைவீதியில் சிவசிதம்பரம் என்பவர் கணபதி அடகு கடையை நடத்தி வருகிறார். நாச்சியார்கோவில் அருகே துக்காச்சி கிராமத்தைச் சேர்ந்த பாக்கியராஜ் என்பவர் உலவி வந்துள்ளார். அவர் சற்று மனநலம் சரியில்லாதவர் என கூறப்படுகிறது . இவர் நாச்சியார் கோவில் கடை வீதியில் மது அருந்திவிட்டு தகாத வார்த்தைகள் பேசி வந்ததாகவும் அவ்வப்போது சில கடைகளில் தகராறில் ஈடுபடுவதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று மாலை  நாச்சியார்கோவில் அண்ணா சிலை அருகே சிவசிதம்பரம் என்பவரது அடகுக் கடையில் பாக்கியராஜ் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

காலையிலிருந்தே இந்த தகராறு தொடர்வதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த கடை உரிமையாளர் சிவசிதம்பரம் அருகில் இருந்த விறகு கட்டையில் பாக்யராஜை அடித்துள்ளார் .அடித்த சிறிது நேரத்தில் சாலையிலே பாக்யராஜ் மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக அங்கிருந்த ஆட்டோ ஓட்டுநர்கள் பாக்கியராஜை  108 ஆம்புலன்ஸ் மூலம் கும்பகோணம் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் .

ஆனால் மருத்துவமனை செல்லும் வழியிலேயே பாக்யராஜ் (39)உயிரிழந்தார். இச்சம்பவம் அறிந்த நாச்சியார் கோவில் காவல் நிலையத்தார் சிவசிதம்பரத்தை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். பாக்யராஜின் உடல் பிரேத பரிசோதனைக்காக கும்பகோணம் அரசு பொது மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.  சிவசிதம்பரம் பாக்யராஜ் -யை அடிக்கும் காட்சி அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.

 திருவிடைமருதூர் டிஎஸ்பி  ராதாகிருஷ்ணன் , நாச்சியார் கோவில் கடைவீதியில் உள்ள ஆட்டோ ஓட்டுநர்களிடம் விசாரணை மேற்கொண்டார்.இந்த சம்பவம் நாச்சியார் கோவில் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com