
பழனியில் பள்ளிக்குச் சென்ற ஒன்பதாவது படிக்கும் சிறுவனை கடத்திச் செல்ல முயன்ற வடமாநிலத்தைச் சேர்ந்த நபரை பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே மயிலாடும்பாறையில் தனியார் பள்ளியில் படிக்கும் ஒன்பதாம் வகுப்பு மாணவன் வீட்டிலிருந்து பள்ளிக்கு செல்வதற்காக நின்று கொண்டிருந்தபோது அங்கு வந்த வட மாநிலத்தை சேர்ந்த நபர் ஒருவர் சிறுவனை கையைப் பிடித்து தரதரவென இழுத்து கடத்தி செல்ல முயன்றுள்ளார் .
இதில் அதிர்ச்சி அடைந்த சிறுவன் அழுது கொண்டே கூச்சலிட்டுள்ளான். கூச்சலிட்ட சிறுவனின் முகத்தில் எச்சிலை துப்பியுள்ளார் அந்த வடமாநிலத்தவர். பின்னர் சிறுவன் அலறல் சத்தத்தை கேட்டு அங்கிருந்து பொதுமக்கள் வந்து சிறுவனை மீட்க முயன்ற பெண்களை தள்ளிவிட்டு சென்ற போது , பொதுமக்கள் கூட்டம் கூடி வடமாநில நபரை தாக்கி ,கட்டி வைத்தனர்.
பின்னர் காவல் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலிசார் விசாரணை செய்ததில் வட மாநில இளைஞர் அசாம் மாநிலத்தை சேர்ந்த 33 வயதான கனு சர்கார் என்பது தெரியவந்தது.
இதனை அடுத்து வட மாநில இளைஞரை காவல்நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்து சென்றனர் போலீசார். பள்ளிக்குச் சென்ற சிறுவனை வட மாநில இளைஞர் கடத்திச் செல்ல முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது
போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் இவர் மனநலம் பாதித்தவர் என்பதும் மேலும் அவர் மது போதையில் இருந்தார் என்பதும் தெரியவந்துள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.