
புளோரிடாவுல வசிக்கும் 35 வயதான நர்ஸ் அலெக்ஸிஸ் வான் யேட்ஸ் என்பவர், தன்னோட 15 வயசு வளர்ப்பு மகன்கூட முறை தவறிய பாலியல் உறவு வச்சிருந்தது கணவனுக்கு தெரிஞ்சு, இப்போ நர்ஸிங் உரிமத்தை இழந்து, ஜெயில்ல அடைக்கப்பட்டிருக்கார்.
என்ன நடந்துச்சு?
அலெக்ஸிஸ் வான் யேட்ஸ், புளோரிடாவுல ஓகலா பகுதியில இருக்குற ஒரு ரெஜிஸ்டர்டு நர்ஸ். 2024 கோடை விடுமுறைல, 15 வயசு வளர்ப்பு மகன் தன்னோட அப்பாவை (அலெக்ஸிஸ் வான் யேட்ஸோட கணவர்) பாக்க ஓகலாவுக்கு வந்திருந்தான். அப்போ, அலெக்ஸிஸ் வான் யேட்ஸ் இந்த பையன்கூட தப்பான உறவு ஆரம்பிச்சிருக்கார். இந்த கதை 2024 ஜூன்ல ஸ்டார்ட் ஆனதா போலீஸ் விசாரணைல தெரியவந்திருக்கு.
போலீஸ் ரிப்போர்ட் படி, இந்த சம்பவத்துக்கு ஒரு வாரம் முன்னாடி, அலெக்ஸிஸ் வான் யேட்ஸ் வளர்ப்பு மகன்கிட்ட பாலியல் நகைச்சுவைகள் பேசிக்கிட்டு இருந்திருக்கார். “நான் செம ஆசையா இருக்கேன், ரெண்டு வாரமா உறவு வச்சுக்கல”னு பல தடவை சொல்லியிருக்கார். 2024 ஜூலையில ஒரு நைட், அலெக்ஸிஸ் வான் யேட்ஸ் தன்னோட பசங்களை தூங்க வச்சுட்டு, வளர்ப்பு மகன்கூட வீட்டு சோஃபால வீடியோ கேம் ஆடினார். அப்புறம், ஒரு ஹாரர் மூவி பாக்கலாம்னு ரெண்டு பேரும் டிசைட் பண்ணாங்க.
அப்போ, வேலைல இருந்து திடீர்னு வீட்டுக்கு வந்த,அலெக்ஸிஸ் வான் யேட்ஸோட கணவர் இவங்க ரெண்டு பேரும் சோஃபால ஆடையில்லாம இருக்குறதை பார்த்துட்டார். இத பார்த்து ஷாக் ஆன கணவர், உடனே போலீஸுக்கு புகார் கொடுத்தார். வளர்ப்பு மகன் அங்க இருந்து ஓடி போயிருக்கார்.
அடுத்த நாள் என்ன ஆச்சு?
சம்பவத்துக்கு மறுநாள், அலெக்ஸிஸ் வான் யேட்ஸ் வளர்ப்பு மகனுக்கு போன் பண்ணி, “கணவர் பார்க்கலைனா, இந்த உறவை தொடர்ந்திருக்கலாம்”னு சொல்லியிருக்கார். இன்னும் ஒரு ஸ்டெப் மேல போய், தன்னோட பாலியல் செயல்பாட்டுக்கு மார்க் போட சொல்லி கேட்டிருக்கார். அதுக்கு வளர்ப்பு மகன், “10-க்கு 7”னு சொன்னாராம். இவை அனைத்தும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
விசாரணைக்கு பிறகு, அலெக்ஸிஸ் வான் யேட்ஸ் கைது செய்யப்பட்டுள்ளார். 12 முதல் 18 வயசு வரை உள்ள ஒருத்தரை பாலியல் துஷ்பிரயோகம் பண்ண குற்றச்சாட்டு பதிவு ஆகியிருக்கு. இந்த குற்றச்சாட்டுக்கு அலெக்ஸிஸ் வான் யேட்ஸ் “நான் குற்றம் செய்யலை”னு கோர்ட்டுல சொல்லியிருக்கார். ஆனா, புளோரிடா சட்டப்படி, இது ரொம்ப கடுமையான குற்றம், முன்ஜாமீன் கிடைக்காத வகை. இந்த கேஸ் கோர்ட்டுல நிரூபிக்கப்பட்டா, நீண்ட நாள்ல ஜெயில் தண்டனை உறுதி.
புளோரிடா நர்ஸிங் போர்டு (Florida Board of Nursing) இந்த சம்பவத்தை சீரியஸா எடுத்துக்கிட்டு, அலெக்ஸிஸ் வான் யேட்ஸோட நர்ஸிங் உரிமத்தை கேன்சல் பண்ணியிருக்கு. போர்டு ஒரு அறிக்கையில, “அலெக்ஸிஸ் வான் யேட்ஸ் ஒரு சின்ன வயசு பையன்கூட பாலியல் உறவு வச்சது, ஒரு நர்ஸா இருக்க தேவையான ஒழுக்கத்தோடு இல்லைன்னு காட்டுது”னு சொல்லியிருக்கு. இதனால, அலெக்ஸிஸ் வான் யேட்ஸுக்கு இனி நர்ஸிங் ஜாப் கிடைக்காது.
இந்தியாவுல இப்படி ஒரு சம்பவம் நடந்தா, சமூகமும் சட்டமும் இன்னும் கெடுபிடியா இருக்கும். இந்தியாவுல POCSO (Protection of Children from Sexual Offences) சட்டம் 2012-ன்படி, 18 வயசுக்கு கீழ் உள்ளவங்ககூட உறவு வச்சா, சம்மதம் இருந்தாலும் கிரிமினல் குற்றம். இதுக்கு 7 வருஷம் முதல் ஆயுள் தண்டனை வரை கிடைக்கும்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்