'மைத்துனருடன் கள்ளத்தொடர்பு' - உறவிற்கு தடையாக இருந்ததால் கணவன் கொலை!

உத்தரப் பிரதேசத்தில் மனைவியும் அவரது மைத்துனரும் சேர்ந்து கணவனை கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
'மைத்துனருடன் கள்ளத்தொடர்பு' - உறவிற்கு தடையாக இருந்ததால் கணவன் கொலை!
Published on
Updated on
1 min read

உத்தரப் பிரதேசத்தில் மனைவியும் அவரது மைத்துனரும் சேர்ந்து கணவனை கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. இருவரின் கள்ள உறவிற்கு தடையாக இருந்த காரணத்தால் கணவனை கொலை செய்ததாக கூறியுள்ளனர்.

உத்தரப் பிரதேசத்தின் பண்டா மாவட்டத்தில் நிஷா என்ற பெண் தனது மைத்துனருடன் சேர்ந்து தன் கணவர் சோனுவைக் கொலை செய்துள்ளார். நிஷா தனது மைத்துனரான மோனுவுடன் திருமணத்தை மீறிய உறவில் இருந்திருக்கிறார். இவர்களின் இந்த கள்ளத்தொடர்பிற்கு சோனு தடையாக இருந்து வந்துள்ளதால் ஏற்பட்ட கோபத்தில், இருவரும் சேர்ந்து சோனுவின் கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் காமசின் காவல் நிலையப் பகுதிக்குட்பட்ட ஜாமு கிராமத்தில் நடந்துள்ளது.

22 வயதான சோனு, ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு நிஷா என்ற பெண்ணைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்குப் பிறகு, சோனு சூரத்தில் கூலித் தொழிலாளியாகப் பணிபுரிந்து வந்துள்ளார். சம்பவம் நடப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்புதான் அவர் வீட்டிற்குத் திரும்பியிருக்கிறார். ஏப்ரல் 5ஆம் தேதி அதிகாலையில், சோனுவின் உடல் அவரது ஆழ்துளைக் கிணற்றுக்கு அருகே கண்டெடுக்கப்பட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. முதலில், குற்றம் சாட்டப்பட்ட மனைவியான நிஷா கூச்சலிட்டுள்ளார். அதன் பின்னர், அனைவரையும் திசைதிருப்புவதற்காக, சோனு தூங்கும்போது பாம்பு கடித்துவிட்டதாக ஒரு கதையை உருவாக்கியுள்ளார். இருப்பினும், காவல்துறையினர் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பியபோது, ​​சோனு கழுத்தை நெரித்துக் கொல்லப்பட்டது தெரியவந்தது. சம்பவ இடத்தில் கிடைத்த ஆதாரங்களும், நிஷாவின் சந்தேகத்திற்கிடமான நடத்தையும் காவல்துறையினரின் சந்தேகத்தை மேலும் வலுப்படுத்தின. கடுமையான விசாரணைக்குப் பிறகு, நிஷா தனது குற்றத்தை ஒப்புக்கொண்டு முழு உண்மையையும் கூறியுள்ளார்.

சோனு அடிக்கடி வேலை விஷயமாக வெளியூர் சென்றுவிடுவதாக நிஷா போலீசாரிடம் கூறியிருக்கிறார். அந்த நேரத்தில், அவர் தன் மைத்துனரான மோனுவுடன் திருமணத்திற்கு மீறிய உறவை வளர்த்துக் கொண்டுள்ளார். அதன்பின்பு அவர்கள் இருவரும் திருமணம் செய்துகொள்ள விரும்பியுள்ளனர். சூரத்திலிருந்து திரும்பிய சோனு, இந்த உறவைப் பற்றி அறிந்ததும் அதை எதிர்த்துள்ளார். அதன்பின்பு, இந்த எதிர்ப்பே அவரது உயிருக்கு அச்சுறுத்தலாக மாறியிருக்கிறது. நிஷாவும் மோனுவும் சேர்ந்து ஒரு திட்டம் தீட்டி, சோனு தூங்கிக்கொண்டிருந்தபோது அவரைக் கழுத்தை நெரித்துக் கொலைசெய்துள்ளனர். இந்த கொலை சம்பவம் அந்தக் குடும்பத்தை தற்போது நிலைகுலையச் செய்துள்ளது. அதன்பின்பு காவல்துறையினர் நிஷாவையும் மோனுவையும் சிறைக்கு அனுப்பியதோடு, மேலதிக சட்ட நடவடிக்கைகளையும் தொடங்கியுள்ளனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com