"இரண்டு பெண்களுடன் தொடர்பில் இருந்த வாலிபர்” - மற்றொரு பெண்ணையும் காதலித்து ஏமாற்றிய சம்பவம்… மகளின் சடலத்துடன் பெற்றோர் போராட்டம்

பிரியதர்ஷினியின் உறவினர்கள் மற்றும் கல்புதூரை சேர்ந்த பொதுமக்கள் காவல் நிலையம் முன் முற்றுகையிட்டதால்..
"இரண்டு பெண்களுடன் தொடர்பில் இருந்த வாலிபர்” - மற்றொரு பெண்ணையும் காதலித்து ஏமாற்றிய சம்பவம்… மகளின் சடலத்துடன் பெற்றோர் போராட்டம்
Published on
Updated on
2 min read

காட்பாடி சேர்ந்த செவிலியர் பணிப்பெண் பெங்களூர் தனியார் மருத்துவமனையில் மர்ம சாவு.உறவினர்கள் பிணத்துடன் காட்பாடி காவல் நிலையத்தில் முன் முற்றுகையிட்டு புகார் மனு அளித்துள்ளனர்.

கொலைக்கு காரணமான கணவர் ராஜேஷ்குமாரை கைது செய்யக்கோரி வலியுறுத்தல். காட்பாடி கல்புதூர் அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்தவர் ஓய்வு பெற்ற சாலை பணியாளர் அசோக்குமார் இவரது மனைவி ஜான்சி. இவர்களுக்கு பிரியதர்ஷினி மற்றும் இரண்டு மகன்கள் உள்ளனர். மகள் பிரியதர்ஷினி செவிலியர் படிப்பு முடித்து பெங்களூர் தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார். இதனடையில் கல்புதூர் பகுதியை சேர்ந்த பழ வியாபாரியின் மகன் ராஜ்குமாரை காதலித்து வந்துள்ளார்.ஏற்கனவே இரண்டு பெண்களை திருமணம் செய்யாமல் திருமணத்திற்கு மீறிய உறவில் வாழ்ந்து வந்ததாகவும் மேலும் வேறொரு பெண்ணை திருமணம் செய்து அதுகுறித்து விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது.

இதன் காரணமாக பிரியதர்ஷினியின் பெற்றோர் ராஜ்குமாரை திருமணம் செய்து கொள்ள வேண்டாம் என்று எதிர்த்து வந்துள்ளனர். ஆனால் பெற்றோர்கள் மற்றும் உறவுகளின் அறிவுறுத்தலை மீறி ராஜ்குமாரை யாருக்கும் தெரியாமல் திருமணம் செய்து கொண்டுள்ளார். திருமணத்தை பதிவு செய்ய வேண்டும் என்று காட்பாடி தேவாலயத்தில் திருமணம் நடந்ததாகவும் அதற்குரிய திருமண பத்திரிகையை அச்சடித்துள்ளார். ஆனால் திருமண பதிவு செய்வதாக கூறி பதிவு செய்யாமல் அவரை ஏமாற்றியதாகவும் கூறப்படுகிறது. இதனால் கணவர் ராஜ்குமார் மீது சந்தேகம் எழுந்த பிரியதர்ஷினி திருமணத்தை பதிவு செய்ய வலியுறுத்தி உள்ளார். இதனால் கோபமடைந்த ராஜ்குமார் பலமுறை பிரியதர்ஷினியிடம் சண்டை போட்டு வந்துள்ளார். இதனை பற்றி பெற்றோருக்கும் பிரியதர்ஷினி போனில் தெரிவித்து வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் காலை முதல் மாலை வரை இருவரும் போனில் தொடர்ந்து சண்டையிட்டு வந்துள்ளனர். நேற்று முன்னிரவு ஒன்பது மணி அளவில் திடீரென்று பெற்றோருக்கு போன் செய்த பிரியதர்ஷினி இந்த விஷயத்தை கூறியுள்ளார். “நாங்கள் வருகிறோம் தைரியமாக இரு” என்று கூறிய அவர்கள் உடனடியாக பெங்களூர் சென்றுள்ளனர். தொடர்ந்து கணவர் ராஜ்குமாரின் சண்டை அதிகமாகவே அவரது சக தோழியிடம் கூறிவிட்டு போனை ஆப் செய்துள்ளார். இதனிடையில் பிரியதர்ஷினியின் பெற்றோர்களுக்கு அவர் பணிபுரியும் தனியார் மருத்துவமனை நிர்வாகத்திலிருந்து செல்போன் அழைப்பு வந்துள்ளது. அதில் “உங்கள் பெண் தூக்கிட்டு இறந்து விட்டாள்” என்கின்ற தகவலை தெரிவித்துள்ளனர். பதறி அடித்த அவரது பெற்றோர்கள் நேராக மருத்துவமனைக்கு சென்று பார்த்துள்ளனர். அங்கு உயிரற்ற நிலையில் இருந்த பிரியதர்ஷினி உடலைப் பார்த்து கதறி அழுதுள்ளனர். மருத்துவமனை நிர்வாகமே காவல்துறைக்கும் தகவல் தெரிவித்து பிரியதர்ஷினி உடலை பிரேத பரிசோதனைக்காக பெங்களூர் சர் சி வி ராமன் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

பிரியதர்ஷினி மரணத்திற்கு காரணமான அவரது கணவர் ராஜ்குமாரை கைது செய்ய வேண்டும் என்று பெங்களூர் போலீசாரிடம் அவரது பெற்றோர் கோரிக்கை வைத்தனர். ஆனாலும் அதை பெங்களூர் காவல் துறையினர் அதை பொருட்படுத்தாமல், மருத்துவமனைக்கு பெயர் கெட்டுவிடக் கூடாது என்பதற்காக அவர்கள் ஒருதலைப் பட்சமாக விசாரணை மேற்கொண்டதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் திருமணம் ஆகி இரண்டு மாதத்திலேயே உயிரிழந்த பிரியதர்ஷினியின் உடலை கோட்டாட்சியர் விசாரணை முடிந்து பிரேத பரிசோதனை செய்து உடலை பெற்றோர்களிடம் ஒப்படைத்தனர்.

மகளின் மரணத்திற்கு கர்நாடகா காவல் நிலையத்தில் நியாயம் கிடைக்காது என்பதை அறிந்த பெற்றோர் பிரியதர்சினியின் உடலை காட்பாடி காவல் நிலையத்திற்கு முன்பாக வைத்து தன் மகளின் மரணத்திற்கு காரணமான ராஜ்குமார் மற்றும் அவரது குடும்பத்தாரையும் உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று புகார் மனு அளித்துள்ளனர். அதை காட்பாடி போலீசார் வாங்க மறுத்தனர். அதனையடுத்து பிரியதர்ஷினியின் உறவினர்கள் மற்றும் கல்புதூரை சேர்ந்த பொதுமக்கள் காவல் நிலையம் முன் முற்றுகையிட்டதால் அங்கே பரபரப்பு ஏற்பட்டது. காட்பாடி காவல் நிலைய ஆய்வாளர் தயாளன் பொதுமக்கள் மற்றும் பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி புகாரை பெற்றுள்ளார். இது குறித்து விசாரித்து உடனடியாக நடவடிக்கை மேற்கொள்வதாக அளித்த உத்தரவாதத்தின் அடிப்படையில்,அங்கிருந்து பிரியதர்ஷினியின் உடலை எடுத்துச் செல்ல உறவினர்கள் ஒத்துக்கொண்டனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com