“நள்ளிரவில் வீடு புகுந்து 60 வயது மூதாட்டி பாலியல் துன்புறுத்தல்” - மீண்டும் அதிகாலையில் வந்து அத்துமீறல்… கள்ளக்குறிச்சியில் பரபரப்பு!

மூதாட்டி கத்தி கூச்சலிடவே அக்கம் பக்கத்தினர் வருவதை அறிந்து தப்பி ஓடி தலைமறைவானார்...
“நள்ளிரவில் வீடு புகுந்து 60 வயது மூதாட்டி பாலியல் துன்புறுத்தல்” - மீண்டும் அதிகாலையில் வந்து அத்துமீறல்… கள்ளக்குறிச்சியில் பரபரப்பு!
Published on
Updated on
2 min read

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே ராவத்தநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த - 60 வயது மூதாட்டி விஜயா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) இவருக்கு திருமணமாகி ஒரு மகள் உள்ள நிலையில் கடந்த 20 வருடங்களுக்கு முன்பு உயிரிழந்திருக்கிறார். மேலும் மூதாட்டியின் மகளும் திருமணமாகி அவரது கணவர் வீட்டில் வசித்து வரும் நிலையில் மூதாட்டி கிராமத்தில் தனியாக வசித்து வருகிறார். அருகில் உள்ள விவசாய நிலங்களில் கூலி வேலை செய்வதை வழக்கமாக வைத்திருந்த மூதாட்டி இரவு நேரங்களில் சிறுது நேரம் அக்கம் பக்கத்தினருடன் பேசிவிட்டு உறங்க செல்வதை வழக்கமாக வைத்திருந்திருக்கிறார்.

இந்நிலையில் வழக்கம் போல நேற்று இரவு அக்கம் பக்கத்தினருடன் பேசிவிட்டு மூதாட்டி உறங்க சென்ற நிலையில் அவரது வீட்டில் பதுங்கி இருந்த மர்ம நபர் மூதாட்டியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு பாலியல் தொல்லை அளித்திருக்கிறார். இதனால் அதிர்ச்சியடைந்த மூதாட்டி கத்தி கூச்சலிடவே அருகில் இருப்பவர்களை வருவதை அறிந்த அந்த மர்ம நபர் அங்கிருந்து பிறகு அந்த 60 வயது மூதாட்டி கத்தி கூச்சலிடவே அக்கம் பக்கத்தினர் வருவதை அறிந்து தப்பி ஓடி தலைமறைவானார். பின்னர் சிறிது நேரம் அவரை தேடி அக்கம் பக்கத்தினர் மூதாட்டியை உறங்க சொல்லிவிட்டு அவரது வீட்டை கண்காணித்து வந்திருக்கின்றனர்.

Admin

அப்போது மீண்டும் அதிகாலையில் அந்த மர்ம நபர் யாருக்கும் தெரியாமல் பதுங்கி மூதாட்டியின் வீட்டிற்குள் சென்று மூதாட்டியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபடுவதற்காக முயற்சி செய்த போது கண்காணித்து வந்த அக்கம் பக்கத்தினர் அவரை மடக்கி பிடித்து வடபொண்பரப்பி போலீசாரிடம் ஒப்படைத்தனர். பின்பு இந்த நபரை விசாரித்த போது அவர் அருகில் உள்ள சோழம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த அலெக்ஸ் பாண்டியன் என்பது தெரியவந்தது. அதை தொடர்ந்து அவர் மூதாட்டிக்கு பாலியல் தொந்தரவு அளித்தது உறுதி செய்யப்பட்டது.

எனவே வடபொண்பரப்பி போலீசார் அலெக்ஸ் பாண்டியன் பாலியல் வன்கொடுமை மற்றும் பாலியல் சீண்டல் வழக்கு பதிவு செய்து சங்கராபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் தனியாக வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த 60 வயது மதிக்கத்தக்க மூதாட்டியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட வாலிபர் கைது செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com