“பட்டப்பகலில் வெட்டிக் கொல்லப்பட்ட ஓட்டுநர்” - ஆட்டோ ஸ்டாண்டில் நடந்த கொடூர சம்பவம்… தங்கைக்காக பழிக்கு பழி வாங்கிய அண்ணன்!

பெருமாளுக்கு ஆதரவாக அவரது மகன்கள் மணிகண்டன் மற்றும் சுப்பையாதாஸ் ஆகியோர் தகராறில் ஈடுபட்டிருக்கின்றனர்...
velmurugan and  govindhan
velmurugan and govindhan
Published on
Updated on
1 min read

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி சாதரக்கோன்விளையை சேர்ந்தவர் 62 வயதுடைய சிவன். இவருக்கும் கோவிந்தன், மகராசி மற்றும் முத்துலட்சுமி என ஒரு மகன் இரண்டு மகள்கள் இருந்த நிலையில் மகராசி கடந்த சில வருடங்களுக்கு முன்பு உயிரிழந்திருக்கிறார். பின்னர் சிவன் தனது இரண்டு பிள்ளைகளுடன் வசித்து வந்த நிலையில் முத்துலட்சுமி கடந்த 2024 ஆம் ஆண்டு நெல்லை மாவட்டம், நாங்குநேரி அழகப்பபுரத்தை சேர்ந்த வேல்முத்து என்பவருக்கு திருமணம் செய்து வைத்திருக்கிறார். திருமணத்திற்கு பிறகு தனது கணவர் வீட்டில் வாழ்ந்து வந்த முத்துலட்சுமி தலை தீபாவளி கொண்டாடுவதற்கு கணவருடன் அவரது தந்தை சிவன் வீட்டிற்கு சென்றிருக்கிறார்.

அப்போது சிவன் வசித்து வரும் தெரு வழியாக ஒருவர் இருசக்கர வாகனத்தில் வேகமாக சென்றிருந்திருக்கிறார். இதனால் சிவனும் அவரது மகன் கோவிந்தனும் அவரை வழிமறித்து கண்டித்திருக்கின்றனர். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு நிலையில் அதே பகுதியில் வசிக்கும் பெருமாள் என்பவர் வாகன ஓட்டிக்கு சாதகமாக பேசி சிவனையும் அவரது மகன் கோவிந்தனையும் தாக்கியதாக சொல்லப்படுகிறது. பின்னர் பெருமாள் மற்றும் சிவனுக்கு இடையே தகராறு அதிகரித்த போது பெருமாளுக்கு ஆதரவாக அவரது மகன்கள் மணிகண்டன் மற்றும் சுப்பையாதாஸ் ஆகியோர் தகராறில் ஈடுபட்டிருக்கின்றனர்.

இதனை தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் இருதரப்பினரையும் சமாதானம் செய்து அனுப்பிவைத்த நிலையில் சிவனை வீட்டிற்கு அழைத்து செல்ல அவரது மகள் முத்துலட்சுமி வந்திருக்கிறார். அப்போது திடீரென கத்தியுடன் வந்த சுப்பையா தாஸ் “எங்க அண்ணனையே எதிர்த்து பேசுறீங்களா?” என கேட்டு முத்துலட்சுமியை சரமாரியாக குத்தி கொலை செய்திருக்கிறார். இதனை தொடர்ந்து வழக்கு பதிவு செய்த போலீசார் சுப்பையாதாஸை கைது செய்து சிறையில் அடைத்தனர். எனவே பெருமாள் தனது குடும்பத்துடன் வேறு கிராமத்திற்கு சென்று வாழ்ந்து வந்த நிலையில் பெருமாளின் மகன் வேல்முருகன் உடன்குடி பகுதியில் ஆட்டோ ஓட்டி வந்திருக்கிறார்.

இந்நிலையில் தனது தங்கையின் கொலைக்கு பழிக்கு பழி வாங்க நினைத்த கோவிந்தன் இன்று காலை ஆட்டோ ஸ்டாண்டில் இருந்த சுப்பையா தாஸின் தம்பி வேல்முருகனை அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்து விட்டு தப்பிச் சென்றிருக்கிறார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த குலசேகரன் பட்டினம் போலீசார் வேல்முருகன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனை அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து கோவிந்தன் உட்பட இரண்டு சிறார்களை கைது செய்துள்ளனர். பட்ட பகலில் ஓட்டுநர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com