"என் புள்ள முகமே தெரியாத மாதிரி ஆக்கிட்டாங்க சார்” - பூட்டிய வீட்டிற்குள் நடந்த பயங்கரம்..!19 வயதில் 17 கேஸா!!?
சென்னை;திருவொற்றியூர் ரயில்வே ஸ்டேஷன் ரோடு பகுதியில் சேர்ந்தவர் ஆகாஷ் (19). இவர் மீது கொலை முயற்சி வழிப்பறி என 17-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ள நிலையில் கடந்த மாதம் 22-ஆம் தேதி சிறையில் இருந்து வெளியே வந்தார்.
சிறைக்கு செல்லும்போது வழுக்கி விழுந்ததில் இவருக்கு மாவு கட்டு போடப்பட்டிருந்த நிலையில்,சிறையில் இருந்து வெளியே வந்தும் கூட இவர் வெளியில் தலைகாட்டாமல் வாழ்ந்துவந்துள்ளார். இவரது தாயார் வீட்டிலிருந்து எப்போது வெளியே சென்றாலும் ஆகாஷை வீட்டில் வைத்து பூட்டிவிட்டு செல்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.
இப்படியாக பூட்டு போட்டு பூட்டின் சாவியை யாருக்கும் தெரியாமல் வாசலில் இருக்கும் குப்பைத் தொட்டியில் மறைத்து வைத்து வந்ததாகவும் தெரிகிறது.
ஆகாஷின் தாய் சொல்வது என்ன?
“ வழக்கம் போல் இன்னைக்கும் வீட்ட பூட்டிட்டு, புள்ளைக்கு சாப்பாடு வாங்க போனேன் சார், மழைல மாட்டிகிட்டேன்..வந்து பாத்தா என் புள்ளைய எனக்கே அடையாளம் தெரியாத மாதிரி இப்படி கொன்னு போட்டு வெச்சிருக்காங்க சார்..!” என கதறி அழுதார்..
போலீசுக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருவொற்றியூர் போலீசார் ஆகாஷ் உடலை கைப்பற்றி அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, கொலை குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்துவரும் நிலையில் முதற்கட்டமாக மூன்று பேர் இந்த கொலையை செய்திருக்கலாம் என தெரியவந்துள்ளது .
பூட்டிய வீட்டிற்குள் தலைமறைவாக வாழ்ந்து வந்த ரவுடி வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்