"அம்மாவ ஏலியன் தூக்கிட்டு போயிருச்சு" - வீட்டுத் தோட்டத்தில் கண்டெடுக்கப்பட்ட எரிந்த உடல்! கடைசியாக மகன் செய்த அந்த ஒரு போன் கால்

"வேற்றுக்கிரகவாசிகளால் கடத்தப்பட்டதாக" ஒரு விசித்திரமான புகாரை அளித்திருந்ததை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Georgia alien abduction case
Georgia alien abduction case
Published on: 
Updated on: 
1 min read

காணாமல் போன தனது தாயை "வேற்றுக்கிரகவாசிகள் கடத்திச் சென்றுவிட்டதாக" காவல்துறையினரை அழைத்து கூறிய நபர். தாயின் எரிந்த உடல் எச்சங்கள் வீட்டின் பின்புறத் தோட்டத்தில் கண்டெடுக்கப்பட்டதை அடுத்து அந்த நபர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

அமெரிக்காவின் அட்லாண்டாவிலிருந்து வடகிழக்கே சுமார் 75 மைல் தொலைவில் உள்ள ஜார்ஜியாவின் ஹோமர் நகரில், 65 வயதான மேரி கேம்ப்பெலுடன் அவரது மகன் ஜேசன் கிறிஸ்டோபர் கேம்ப்பெல் (35) வசித்து வந்துள்ளார். அவர் தனது தாயை கொன்று உடலை எரித்து மரணத்தை மறைக்க முயன்றதாகக் காவல்துறையினர் தரப்பில் இருந்து கூறப்படுகிறது.

கடந்த ஜனவரி 6 அன்று, மேரி தனது கைப்பை, கார், அடையாள அட்டை மற்றும் கைபேசி போன்ற முக்கியமான பொருட்களை விட்டுட்டு, இருந்ததற்கான எந்தத் தடயமும் இன்றி காணாமல் போயுள்ளார். இந்த மர்மமான மறைவானது, அண்டை வீட்டாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து, அங்கிருந்த மக்கள் ப்படுதியை தீவிரமாக தேட ஆரம்பித்தனர். இந்த சம்பவம் நடந்து இரண்டு நாட்கள் கழித்து, கேம்பல் புலனாய்வாளர்களிடம் ஒரு கதையைக் கூறியுள்ளார். அதில், ஒரு ஏலியன் போன்ற மர்மமான நபர் தனது தாயை அந்த இடத்திலிருந்து அழைத்துச் சென்றதாகவும், அதன் பிறகு அவரிடமிருந்து எந்தத் தகவலும் வரவில்லை என்றும் அவர் புலனாய்வாளர்களிடம் கூறினார்.

இதற்கு முன்பு, மேரி கேம்ப்பெல் காணாமல் போனதாக கூறப்பட்டு புலனாய்வாளர்கள் தேடுதல் வேட்டைக்கு வருவதற்கு வெறும் 24 மணி நேரத்திற்கு முன்பு, கேம்ப்பெல் காவல்நிலையத்திற்கு அழைத்து, "வேற்றுக்கிரகவாசிகளால் கடத்தப்பட்டதாக" ஒரு விசித்திரமான புகாரை அளித்திருந்ததை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த வித்தியாசமான புகாரினை தொடர்ந்து, சம்பவம் நடந்த விரைந்து சோதனை நடத்தினர். அங்கு காவல்துறையினர் கண்ட காட்சி அவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அந்த வீட்டின் பின்புறத்தில் புகைந்துகொண்டிருந்த நெருப்பு மற்றும் எரிந்துபோன மெத்தைக்கு அருகில், மேரியின் கருகிய உடலை துப்பறிவாளர்கள் கண்டெடுத்துள்ளனர்.

பிரேத பரிசோதனையில், கண்டெடுக்கப்பட்ட உடல் மேரியுடையது என உறுதி செய்யப்பட்டது. அடுத்த மாதமே கேம்ப்பெல் மீது முறையாகக் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. தனது தாயை எதற்காக கேம்பெல் கொலை செய்தார் என்ற எந்த ஒரு தகவலையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பேங்க்ஸ் கவுண்டி அரசு வழக்கறிஞர்கள் நடத்திய ஐந்து நாள் விசாரணைக்குப் பிறகு, கேம்ப்பெல் ஒரு மரணத்தை மறைத்த குற்றத்திற்காகக் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும், இந்த வழக்கில் நீதிபதி ஆல்பர்ட் காலியர் மிகக் கடுமையான தண்டனை அதாவது, அதிகபட்சமாக பத்து ஆண்டுகள் சிறைத் தண்டனையை விதித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.