

அமெரிக்காவின் பிட்ஸ்பர்க் நகரில், சிறுமியை பின்தொடர்ந்து சென்று மர்ம நபர் ஒருவர், பாலியல் உறவுக்கு 100 டாலர் தருவதாகக் கூறி அந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முகமூடி அணிந்து வந்த 27 வயது நபர், சிறுமியைப் பொது இடத்திலேயே தாக்கி வன்கொடுமை செய்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
பிட்ஸ்பர்க்கின் ஹேசல்வுட் பகுதியில் கடந்த அக்டோபர் 17ஆம் தேதி மதியம் 1 மணியளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அங்குள்ள பேருந்து நிறுத்தத்தில் இருந்து வீட்டுக்குச் செல்வதற்காக நடந்து சென்ற 13 வயது சிறுமியை, குவின்லான் பர்க் என்ற 27 வயது இளைஞர் பின் தொடர்ந்துள்ளார். அவர் பேஸ் மாஸ்க் அணித்திருந்ததாக சொல்லப்படுகிறது.
சிறுமியைப் பின்தொடர்ந்த பர்க், அவரது உடல் குறித்து ஆபாசமாகப் பேசியதுடன், பாலியல் ரீதியான சீண்டலில் ஈடுபட்டுள்ளார். மேலும், சிறுமியின் தொடையைத் தொட்டு, இதற்கு முன்பு பாலியல் உறவு வைத்துள்ளாயா? என்றும் கேட்டுள்ளார். தொடர்ந்து, தன்னுடன் பாலியல் உறவு வைத்துக்கொண்டால் 100 டாலர் தருவதாக கூறி அத்துமீறி உள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமி, தனக்கு வெறும் 13 வயது தான் ஆகிறது என்று கூறி அங்கிருந்து தப்பிக்க முயன்றுள்ளார். ஆனால், அந்த நபர் சிறுமியின் பேக்கை பிடித்து இழுத்து, அவரைச் சுவரில் தள்ளி பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றப்புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கொடூரச் சம்பவத்தின்போது, அந்த நபர் தனது முகமூடியை அடிக்கடி மேலே, கீழே இழுத்துக்கொண்டிருந்ததாகவும் கூறப்படுகிறது. பின்னர், சிறுமியின் பேக்கில் பையில் இருந்த ஒரு பேப்பரில் தனது தொலைபேசி எண்ணை எழுதி கொடுத்துள்ளார். மேலும், அருகில் உள்ள டாலர் ஜெனரல் கடையில் தன்னை வந்து சந்திக்குமாறு கூறிவிட்டுச் சென்றுள்ளார்.
இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், குற்றம்சாட்டப்பட்ட குவின்லான் பர்க் கடந்த சனிக்கிழமை தானாகவே காவல்துறையிடம் சரணடைந்துள்ளார். இதையடுத்து, அவர் மீது பாலியல் வன்கொடுமை, சிறார்களுடன் சட்டவிரோத பாலியல் தொடர்பு, சிறார்களைச் சீரழித்தது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் அவருக்கான முதற்கட்ட விசாரணை நவம்பர் 20ஆம் தேதி நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.