நண்பனின் மனைவியுடன் கள்ளக்காதலா? வாக்குவாதத்தில் தடுக்க வந்தவர் மீது.. பாய்ந்த கத்தி - அடுத்தடுத்து வெளியாகும் திடுக்கிடும் தகவல்கள்!

முன்னதாகவே, சூர்யா சித்தேஸ்வரனை கொலை செய்யும் நோக்கில் கத்தியை மறைத்து வைத்திருந்துள்ளார்
தருமபுரி murder
Published on: 
Updated on: 
1 min read

தருமபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் ஏற்பட்ட தகராறில், நண்பர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார். மேலும் கொலை சம்பவம் தொடர்பாக சூர்யா என்பவர் பாலக்கோடு நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

தருமபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே ஜக்கசமுத்திரம் கூட்டுரோடு பகுதியைச் சேர்ந்தவர் சித்தேஸ்வரன் (27). இவர் தனியார் கல்லூரியில் பேருந்து ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இவருக்கு அண்மையில் திருமணமாகி மகேஸ்வரி என்ற மனைவியும் உள்ளார். 

சித்தேஸ்வரனுடன் பக்கத்து ஊரை சேர்ந்த சூர்யா (25), அதே பகுதியை சேர்ந்த குணசேகரன் (25), திருமூர்த்தி (25) ஆகியோர் நண்பர்களாகப் பழகி வந்துள்ளனர். பக்கத்து ஊரை சேர்ந்த சூர்யாவுக்கும், சித்தேஸ்வரன் மனைவி மகேஸ்வரிக்கும் பள்ளிப் பருவத்திலிருந்தே காதல் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், மகேஸ்வரிக்கும் சித்தேஸ்வரனுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணத்திற்குப் பிறகும் சூர்யா மகேஸ்வரி உடன் செல்போனில் பழகிவந்ததாக சொல்லப்படுகிறது.

இதனை அறிந்த சித்தேஸ்வரன் மனைவியை முதலில் கண்டித்துள்ளார். மேலும், சூர்யாவுக்கும் மகேஸ்வரிக்கும்  இடையே நடைபெற்ற செல்போன் உரையாடல்களின் ஆடியோ பதிவுகளை நண்பர் குணசேகரன், சித்தேஸ்வரனிடம் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் நண்பர்களுக்குள் விரோதம் மூண்டுள்ளது.

இந்நிலையில், சி.எம்.புதூர் பகுதியில் சித்தேஸ்வரன், சூர்யா மற்றும் அவரின் நண்பர்கள் ஒன்றாக மது அருந்திக் கொண்டு இருந்தார்கள். சித்தேஸ்வரனுக்கும் சூர்யாவுக்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது இருவருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதற்கு முன்னதாகவே, சூர்யா சித்தேஸ்வரனை கொலை செய்யும் நோக்கில் கத்தியை மறைத்து வைத்திருந்துள்ளார். இந்த கைகலப்பில் சூர்யா கத்தியை எடுத்து சித்தேஸ்வரனை குத்த முயன்றுள்ளார். அப்போது இருவருக்கும் இடையிலான மோதலைத் தடுக்க சென்ற நண்பர் குணசேகரனுக்கு கத்திக்குத்து விழுந்ததுள்ளது. இதையடுத்து சூா்யா தரப்பினா் அங்கிருந்து தப்பியோடிவிட்டனர். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த குணசேகரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், மற்றொரு நண்பரான திருமூர்த்தி என்பவருக்கும் தடுக்க முயன்றபோது கைப்பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது. அவர் சிகிச்சைக்காக  தர்மபுரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

சம்பவ இடத்தில் இருந்தவர்கள் மாரண்டஅள்ளி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் பிரேதத்தை உடற்கூறு ஆய்வுக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலைக்கான சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. இதற்கிடையே, நண்பரைக் கொலை செய்ததாகக் கூறப்படும் சூர்யா, பாலக்கோடு நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

கள்ளக்காதல் விவகாரத்தில் ஏற்பட்ட மோதலில், சமாதானம் செய்யச் சென்ற நண்பரே கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் மாரண்டஅள்ளி பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.