தனியாக இருந்த பெண்ணிடம் அத்துமீறல்? வருங்கால கணவரே போட்ட 'அந்த ஒரு ஸ்கெட்ச்'! வாக்குமூலத்தில் வெளியான பகீர் உண்மைகள்

டயரின் வேண்டுகோளின் பேரில் அப்பெண்ணைப் பாலியல் வன்கொடுமை செய்ய ஒப்புக்கொண்டதாகவும் புலனாய்வாளர்களிடம் அவர் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
Arizona fiancé attack case
Arizona fiancé attack case
Published on: 
Updated on: 
1 min read

அரிசோனாவைச் சேர்ந்த ஒரு பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்ய ஒரு நபர் முயற்சி செய்துள்ளார். அவரது முயற்சியை முறியடித்த பிறகு, காவல்துறையினரிடம் அந்த பெண் புகாரளித்துள்ளார். அப்போது விசாரணையில் காவல்துறையினர் ஒரு திடுக்கிடும் உண்மையைக் கண்டறிந்துள்ளனர். அதில், அப்பெண்ணின் வருங்காலக் கணவரே இந்தத் தாக்குதலுக்குத் திட்டமிட்டதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

அக்டோபர் 16 அன்று, அரிசோனாவின் பக்காய் நகரில் உள்ள தனது வீட்டில், குழந்தைகளுடன் இருந்தபோது ​​ஒரு நபர் வீட்டிற்குள் நுழைந்து தன்னைத் தாக்கத் தொடங்கியதாக அப்பெண் காவல்துறையிடம் புகாரளித்துள்ளார். அதிகாரிகள் வருவதற்குள் வீட்டை விட்டு வெளியேறிய அந்த சந்தேக நபரை, அப்பெண் எதிர்த்துப் போராடியதாக காவல்துறை தரப்பில் இருந்து தெரிவிக்கப்படுகிறது.

வீட்டிற்குள் நுழைந்ததாகக் கூறப்படும் அந்த சந்தேக நபர், 20 வயதான அட்ரியன் அயலா என காவல்துறையினரால் அடையாளம் காணப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட பிறகு, அயலா கூறிய உண்மைகள் கவல்த்துறையினரை இன்னும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதில், அப்பெண்ணின் வருங்கால கணவரான 23 வயது ஜாரியன் டயரை அயலா இணையத்தில் சந்தித்ததாகவும், டயரின் வேண்டுகோளின் பேரில் அப்பெண்ணைப் பாலியல் வன்கொடுமை செய்ய ஒப்புக்கொண்டதாகவும் புலனாய்வாளர்களிடம் அவர் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து அயலாவின் சாதனங்களையும், டயருக்குச் சொந்தமான ஒரு கைப்பேசியையும் காவல்துறை பறிமுதல் செய்துள்ளனர். அந்த மின்னணு சாதனங்களில் இருந்து கிடைத்த தரவுகளை ஆய்வு செய்ததில், அயலாவும் டயரும் திட்டமிடப்பட்ட தாக்குதல் குறித்து உரையாடியதற்கான ஆதாரங்களை புலனாய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். மேலும், இந்த சதித்திட்டத்தின் பின்னணியில் உள்ள நோக்கம் தற்போது தெரியவில்லை என்று அதிகாரிகள் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

Woman’s Fiancé
Woman’s Fiancé

அதிகாரிகள் டயரை அவரது பணியிடத்தில் கைது செய்துள்ளனர். மேலும், அவர் மீது கடுமையான தாக்குதல், பாலியல் வன்கொடுமை, பாலியல் தாக்குதல் முயற்சி, ஆட்கடத்தல் மற்றும் சதித்திட்டம் ஆகிய குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பாலியல் வன்கொடுமை முயற்சி, பாலியல் துன்புறுத்தல் மற்றும் கடத்தல் ஆகிய குற்றச்சாட்டுகளையும் அயலா எதிர்கொள்வதாக நீதிமன்ற ஆவணங்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து உயர்மட்ட விசாரணை நடைபெற்று வருவதாக காவலர்கள் தெரிவித்துள்ளனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.