“படுக்கை அறையில் கேமரா வைத்த உளவாளி” - அடைத்து சித்ரவதை செய்த தம்பதி.. ஆந்திராவில் கொன்று உடலை கூவத்தில் போட்ட கொடூரம்!

காரில் வந்து ராயுடுவின் உடலை வீசி சென்றதை கண்டறிந்துள்ளனர்
RAYUDU
RAYUDU
Published on
Updated on
2 min read

சென்னை கூவம் ஆறு 4 வது நுழைவு வாயில் எம்.எஸ் நகர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பின்புறத்தில் கடந்த 8 ஆம் தேதி 25 வயதுடைய ஆண் சடலம் கிடந்தது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஏழுகிணறு போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனை அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனையில் அவர் கொலை செய்யப்பட்டு இருந்தது தெரியவந்தது.

விசாரணையில் இறந்து கிடந்த நபர் திருப்பதியை சேர்ந்த 22 வயதான ராயுடு என்பது தெரியவந்ததுள்ளது. இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர். அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை வைத்து ஒரு கும்பல் காரில் வந்து ராயுடுவின் உடலை வீசி சென்றதை கண்டறிந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து கார் எண் மற்றும் சிசிடிவி காட்சிகளை வைத்து ஜனசேனா கட்சியின் ஐ.டி விங் நிர்வாகி சிவக்குமார், ஜனசேனா கட்சியின் காளஹஸ்தி தொகுதி நிர்வாகி விணுதா கோட்டா, அவரது கணவர் சந்திரபாபு, உதவியாளர் கோபி, கார் ஓட்டுநர் ஷேக் தாசன் ஆகியோரை கைது செய்தனர்.

அவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில் விணுதாவின் வீட்டில் கடந்த 2019 ஆம் ஆண்டு ராயுடு வேளைக்கு சேர்ந்துள்ளார். வீட்டிலேயே தங்கி வேலை பார்த்து வந்த ராயுடு விணுதாவின் அறையில் அவரை கண்காணிக்க தனது செல்போனை வைத்துள்ளார். ஒரு நாள் உடை மாற்றி கொண்டிருந்த விணுதா தனது அறையில் செல்போன் இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்து இதை பற்றி தனது கணவர் சந்திரபாபுவிடம் தெரிவித்துள்ளார்.

பின்னர் அந்த போன் ராயுடு உடையது என்பதை அறிந்த விணுதா மற்றும் சந்திரபாபு ராயுடுவை பிடித்து விசாரித்துள்ளனர். அப்போது ராயுடு தனக்கு எதுவும் தெரியாது என்றும் காளாஸ்திரி தொகுதி MLA வான "தெலுங்கு தேசம் கட்சியைச்" சேர்ந்த பஜாலா சுதீர் ரெட்டி என்பவர் தான் பணம் கொடுத்து இவ்வாறு செய்ய சொன்னதாக தெரிவித்துள்ளார். எனவே இதை பற்றி கட்சியின் மேலிடத்தில் புகாரளித்த விணுதா ராயுடுவை வேலையை விட்டு அனுப்பி வைத்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த 2023 ஆம் ஆண்டு நடந்து முடிந்த தேர்தலில் விணுதா எதிர்த்து நின்று சுதீர் ரெட்டி தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த விணுதா மற்றும் சந்திரபாபு ராயுடவை அவர்களது வீட்டில் அடைத்து வைத்து சித்ரவதை செய்துள்ளனர். மேலும் ராயுடுவை கொலை செய்து அவரது உடலை சக கட்சி நண்பர்கள் மற்றும் வீட்டு கார் ஓட்டுநர் உதவியுடன் காரில் உடலை வைத்து சென்னை கொண்டு வந்து கூவம் ஆற்று கரையோரமாக வீசி விட்டு தப்பி சென்றுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.

இதனை அடுத்து விணுதா, அவரது கணவர் சந்திரபாபு மற்றும் சக கட்சி நிர்வாகிகள், விணுதாவின் கார் டிரைவர் ஆகியோரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கூவம் ஆற்றில் ஒரு ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்டது அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ராயுடுவை கொலை செய்யப்பட்டது ஆந்திர மக்களிடையேயும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com