
கோவை மாவட்டம் சுல்தான்பேட்டை அடுத்துள்ள மலையப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் 55 வயதான திருமலை சாமி. இவர் தனது மகள் கோகிலாவை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த பொன்னுசாமி என்பவரது மகன் சாந்தகுமாருக்கு திருமணம் செய்து வைத்துள்ளார். கோகிலா மற்றும் சாந்தகுமார் தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் அவர்களை திருமலை சாமி கவனித்து வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சாந்தகுமார் கண்ணப்பன் என்பவரது நிலத்திற்கு அருகே உள்ள நிலத்தை வாங்கியுள்ளார். நிலத்தை வாங்கிய சாந்தகுமார் தனது நிலத்தோடு சேர்த்து கண்ணப்பனின் பாதி நிலத்திற்கு வெளி அமைத்து தனது நிலம் என சொந்தம் கொண்டாடியுள்ளார். இதனால் சாந்த குமாருக்கும் கண்ணப்பனுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதற்கிடையே மருமகன் வாங்கிய நிலத்தை பார்க்க திருமலை சாமி சென்றுள்ளார்.
அப்போதும் கண்ணப்பனுக்கு சாந்த குமாருக்கும் இடையே நிலத்தை குறித்து தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் குறுக்கிட்ட திருமலை சாமி தனது மருமகனுக்கு ஆதரவாக கண்ணப்பனை எதிர்த்து பேசி சண்டை போட்டுள்ளார். பின்னர் இருவரும் அவரவர் வேலைகளை பார்த்து வந்துள்ளனர். தொடர்ந்து நிலத்தை குறித்து தகராறு ஏற்பட்டதால் நேற்று முன்தினம் சாந்தகுமாரன் தனது தந்தை பொன்னுசாமி, தம்பி பால பிரசாத் மற்றும் மாமனார் திருமலை சாமியின் முன்னிலையில் நிலத்தை அளந்துள்ளனர்.
பின்னர் நான்கு பெரும் நிலத்திற்கு அருகில் இருந்த டீ கடையில் நின்று பேசிக்கொண்டு இருந்துள்ளனர். அப்போது அங்கு வந்த கண்ணப்பன் சாந்தகுமாரிடம் வாக்குவாதம் செய்துள்ளார். எனவே கண்ணப்பன் மற்றும் சாந்தகுமார் தரப்பினருக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவர்களை விலக்கி சமாதானம் செய்து அனுப்பி வைத்துள்ளனர். பள்ளி முடியும் நேரம் ஆனதால் திருமலைசாமி தனது பேர குழந்தைகளை அழைத்து வர சென்றுள்ளார்.
குழந்தைகளை அழைத்துக் கொண்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த திருமலை சாமி சம்மந்தி மற்றும் மருமகன்கள் டீ கடையிலேயே இருப்பதை பார்த்து அவர்களிடம் சென்று பேசியுள்ளார். அந்த இடத்திற்கு மீண்டும் வந்த கண்ணப்பன் “இன்னும் நீங்க போகலையா என் நிலத்தை ஆட்டைய போட பிளான் போடுறீங்களா” என கேட்டு ஆத்திரத்தில் தனது மறைத்து வைத்திருந்த ஸ்க்ரூடிரைவரை பயன்படுத்தி திருமலை சாமி, பொன்னுசாமி, மாற்றம் பால பிரசாத்தை சரமாரியாக குத்தி விட்டு தப்பி சென்றுள்ளார்.
கண்ணப்பனிடம் இருந்து தப்பித்த சாந்தகுமார் மூவரையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். அங்கு திருமலை சாமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில் மற்ற இருவரும் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றார். தகவல் அறிந்து மருத்துவமனைக்கு வந்த போலீசார் சாந்தகுமாரிடம் விசாரணை மேற்கொண்டு வழக்கு பதிவு செய்து கண்ணப்பனை கைது செய்துள்ளனர். பள்ளிக்கு அருகில் உள்ள டீ கடையில் மூன்று பேர் ஸ்க்ரூடிரைவரால் சரமாரியாக தாக்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.