

பஞ்சாப் மாநிலம், பட்டிண்டா பகுதிக்கு அடுத்துள்ள ராம்புரா பகுதியை சேர்ந்தவர் ஜெஸ்ஸி கவுர் இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த புத் சிங் என்பவருக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணமான நிலையில் 8 வயதில் சுக்ப்ரீத் என்ற மகளும் 6 வயதில் ஃபதேவிர் என்ற மகனும் இருந்தனர். புத் சிங் விவசாயம் செய்து குடும்பத்தை காப்பாற்றி வந்த நிலையில் கணவன் மனைவி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்திருக்கிறது. இதனால் ஆத்திரமடைந்த புத் சிங் மனைவி மற்றும் குழந்தைகளை பிரித்து தனியாக வாழ்ந்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு எட்டு வயதுடைய சுக்ப்ரீத் வாந்தி எடுத்து வாயில் ரத்தம் வெளியேறிய நிலையில் உயிரிழந்திருக்கிறார். இதனை தொடர்ந்து அவரது தாய் மகளின் உடலுக்கு இறுதி சடங்கு செய்து அடக்கம் செய்திருக்கிறார். மேலும் உறவினர்கள் மற்றும் ஊர் மக்களிடம் உடல்நல குறைபாட்டால் உயிரிழந்து விட்டதாக தெரிவித்திருக்கிறார். அதனை தொடர்ந்து கடந்த வாரம் ஆறு வயதுடைய மகன் ஃபதேவிரும் அவரது சகோதரி போலவே வாந்தி எடுத்து வாயில் ரத்தம் வெளியேறிய நிலையில் உயிரிழந்திருக்கிறார். இதனை அறிந்து அதிர்ச்சி அடைந்த ஊர் மக்கள் இதுகுறித்து புத் சிங்கிடம் தகவல் தெரிவித்தனர்.
தனது இரண்டு குழந்தைகளும் மர்மமான முறையில் உயிரிழந்ததை கேட்டு அதிர்ச்சியடைந்த புத் இது குறித்து ராம்புரா காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன் படி வழக்கு பதிவு செய்த போலீசார் சந்தேகத்தின் அடிப்படையில் குழந்தைகளின் தாய் ஜெஸ்ஸி கவுரை கைது செய்து விசாரணை மேற்கொண்ட நிலையில் பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன. கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த ஜெஸ்ஸி கவுருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஜஸ்மித் சிங் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுஇருவரும் தொடர்ந்து நெருக்கமாக பலிக்கி வந்திருக்கின்றனர். நாளடைவில் இவர்களது பழக்கமானது திருமணத்திற்கு மீறிய உறவாக மாறி இருவரும் அடிக்கடி ஜெஸ்ஸி கவுர் வீட்டில் தனிமையில் இருந்ததாக சொல்லப்படுகிறது.
அப்போது இவர்களது உல்லாசத்திற்கு குழந்தைகள் தடையாக இருப்பதாக நினைத்த தாய் ஜெஸ்ஸி கவுர் குழந்தைகளுக்கு உணவில் எலி மருந்து கலந்து கொடுத்து கொலை செய்திருக்கிறார். இதனை தொடர்ந்து வழக்கு பதிவு செய்த போலீசார் ஜெஸ்ஸி கவுர் மற்றும் கொலை உடந்தையாக இருந்த அவரது தங்கை மோட்டோ கவுர் ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். தொடர்ந்து தனிப்படை அமைத்து கள்ளக்காதலன் ஜஸ்மித் சிங்கை தேடி வருகின்றனர். பெற்ற தாயே குழந்தைகளுக்கு விஷம் வைத்து கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.