

அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே நக்கம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் செல்வம். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பிரியா என்பவருக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணமான நிலையில் பத்து வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு குடும்ப தேவைக்காக வெளிநாட்டிற்கு சென்ற செல்வம் அங்கே தங்கி வேலை பார்த்து வந்திருக்கிறார். வருடத்திற்கு ஒரு முறை மட்டும் வீட்டிற்கு வந்து செல்லும் நிலையில் அவரது மனைவி பிரியா குழந்தையுடன் தனியாக வசித்து வந்திருக்கிறார்.
இந்நிலையில் பிரியாவிற்கு அவரது வீட்டிற்கு பின்புறம் வசித்து வந்த ராஜா என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் நெருங்கி பழகி வந்த நிலையில் இவர்களது பழக்கமானது திருமணத்திற்கு மீறிய உறவாக மாறி அடிக்கடி தனிமையில் இருந்து வந்ததாக சொல்லப்படுகிறது. அப்போது பிரியாவிற்கு வெளிநாட்டில் இருந்து அவரது கணவர் அனுப்பும் பணத்தை ராஜா தனது சொந்த செலவுக்காக கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. இருவரும் தொடர்ந்து பழகி வந்த நிலையில் கடந்த வாரம் ராஜா வெளிநாட்டில் இருந்து சொந்த ஊருக்கு விடுமுறைக்கு வருவதாக அவரது மனைவிக்கு தகவல் தெரிவித்திருக்கிறார்.
கணவர் வருவதை அறிந்து அதிர்ச்சி அடைந்த பிரியா உடனடியாக கள்ளக்காதலன் வீட்டுக்கு சென்ற பிரியா அவரிடம் இதுவரை தான் கொடுத்த பணத்தை திரும்ப கொடுக்குமாறு கேட்டிருக்கிறார். அதற்கு தற்போது ராஜா தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை என கூறிய நிலையில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து பிரியா அறைக்குள் சென்று தாழிட்டு கொண்டதாக சொல்லப்படு நிலையில் ராஜா அச்சமடைந்த காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்திருக்கிறார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கதவை உடைத்து பார்த்தபோது பிரியா தூக்கில் சடலமாக கிடந்துள்ளார்.
இதனை தொடர்ந்து பிரியாவின் உடலை கைப்பற்றிய போலீசார் அவரது உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்து இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் கணவன் வீட்டிற்கு வந்து பணத்தை குறித்து கேட்டல் கள்ளக்காதல் பற்றி கணவனுக்கு தெரிந்துவிடுமோ என்ற அச்சத்தில் பிரியா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர். இருப்பினும் இது தற்கொலையா? அல்லது கொலையா? என தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கள்ளக்காதலன் வீட்டில் காதலி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
(குறிப்பு: மன அழுத்தம் அல்லது தற்கொ*லை எண்ணம் ஏற்பட்டால், அரசு உதவி மையமான 104 அல்லது சினேகா உதவி மையம் 044-24640050 ஆகிய எண்களைத் தொடர்பு கொண்டு ஆலோசனை பெறலாம்.)
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.