“என் பொண்டாட்டி கூட நீ எதுக்கு பேசுற” - டாஸ்மாக் வாசலில் நடந்த கொலை.. கணவரின் நண்பருடன் கள்ளத்தொடர்பா?

கொலைக்குப் பிறகு தலைமறைவாக இருந்த ஆதிநாராயணாவை தனிப்படை அமைத்து போலீசார் தீவிரமாக தேடி...
Karnataka Bagepalli Nagaraju Murder
Karnataka Bagepalli Nagaraju Murder
Published on
Updated on
1 min read

கர்நாடக மாநிலம், சிக்பள்ளாப்பூர் மாவட்டம், பாகேபல்லி தாலுகாவில், மனைவியுடன் தொடர்பில் இருப்பதாக ஏற்பட்ட சந்தேகத்தின் காரணமாக, ஒருவர் மதுக் கடையில் வைத்து குத்திக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த (செப் 9) ஆம் தேதி மதியம் சுமார் 12.30 மணியளவில், கத்தமவாரப்பள்ளி கிராமத்தில் உள்ள ஜே.கே.என். ஒயின்ஸ் மதுக்கடையில் 42 வயதுடைய நாகராஜு என்பவர் மது அருந்திக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது, தலைக்கவசம் அணிந்த படி அங்கு வந்த ஆதிநாராயணா என்பவர் நாகராஜுவை கத்தியால் குத்தி விட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளார்.

இந்த தாக்குதலில் நாகராஜுவுக்கு பலத்த காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அதிகளவில் ரத்தப்போக்கு ஏற்பட்ட நிலையில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து நாகராஜுவின் மனைவி கே.சி. மணியம்மா அளித்த புகாரின் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு சென்ற பாகேபல்லி போலீசார் இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். கொலைக்குப் பிறகு தலைமறைவாக இருந்த ஆதிநாராயணாவை தனிப்படை அமைத்து போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.

இந்நிலையில், (செப் 14 ஆம்) தேதி மாலை சிக்பள்ளாப்பூரில் உள்ள தனியார் பேருந்து நிலையத்தில் வைத்து அவரை போலீசார் கைது செய்தனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், நாகராஜுவும் ஆதிநாராயணாவும் ஒருவருக்கொருவர் அறிமுகமானவர்கள் என்பதும், இருவரது குடும்பங்களும் முன்பு ஒரே பகுதியில் வசித்து வந்ததால் நண்பர்கள் போல பழகியது தெரிய வந்ததாக கூறப்படுகிறது. இந்த சூழலில் ஆதிநாராயணா அவரது மனைவிக்கும் நாகராஜுவிற்கு திருமணத்திற்கு மீறிய உறவு இருப்பதாக நினைத்து சந்தேகமடைந்துள்ளார்.

இதனால் அடிக்கடி மனைவியிடம் சண்டையிட்டு வந்த ஆதிநாராயண, நகராஜுவிடமும் தகராறு செய்துள்ளார். இதன் காரணமாக இரு குடும்பங்களும் அவ்வப்போது வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்ததாக சொல்லப்படுகிறது. எனவே ஆதிநாராயண மனைவி மற்றும் குழந்தைகளுடன் வேறு இடத்திற்கு சென்று வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார். இருப்பினும் சந்தேகம் குறையாத ஆதிநாராயண நகராஜூவை தொடர்ந்து கண்காணித்து வந்துள்ளார்.

அதன் படி சம்பவத்தன்று நாகராஜூவை பின்தொடர்ந்து டாஸ்மாக் சென்ற ஆதிநாராயண வாக்குவாதத்தில் ஈடுபட்டி “என் பொண்டாட்டி கூட நீ எதுக்கு பேசுற” என கேட்டு கத்தியால் குதி கொலை செய்தததாக தெரியவந்துள்ளது. மேலும் கைது செய்யப்பட்ட ஆதிநாராயணாவை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். தொடர்ந்து, நீதிமன்ற உத்தரவின்படி அவர் காவலில் வைக்கப்பட்டுள்ளார். இந்தக் கொலை தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com