“மாமியாரை கழிவறையிலேயே.. தீர்த்துக்கட்டிய மருமகள்” - நாடகமாடியும் போலீசிடம் சிக்கியது எப்படி?

இதனைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட மருமகள் இந்துஜா மாமியாரை தீர்த்துக்கட்ட முடிவு செய்து
chengalpattu murder
Published on
Updated on
1 min read

செங்கல்பட்டு அருகே மாமியாரை கொடூரமாக கொலை செய்துவிட்டு கழிவறையில் வழுக்கி விழுந்து மூச்சுத்திணறலால் உயிரிழந்ததாக நாடகமாடிய மருமகளை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

செங்கல்பட்டு அடுத்த பெரியநத்தம் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மனைவி இந்துஜா (28), இருவருக்கும் திருமணமாகி 5 ஆண்டுகள் ஆன நிலையில் வெங்கடேசனின் தாய் பெருந்தேவியுடன் (61) ஒரே வீட்டில் வசித்து வந்தனர். திருமணமான நாள் முதலே மாமியாருக்கும் மருமகளுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. மேலும் கணவன் மனைவி இடையே வரும் சண்டைகளுக்கும் மாமியாரே காரணம் பெருந்தேவியின் மீது என இந்துஜா கடும் ஆத்திரத்தில் இருந்துள்ளார்.

இந்நிலையில் சம்பவத்தன்று பெருந்தேவி கழிவறைக்கு சென்றபோது எதிர்பாராத விதமாக வழுக்கி விழுந்துள்ளார். இதனைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட மருமகள் இந்துஜா மாமியாரை தீர்த்துக்கட்ட முடிவு செய்து அவரது கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார்.

அதைத்தொடர்ந்து எதுவுமே தெரியாதது போல் மாமியார் கழிவறையில் தவறி விழுந்து மூச்சுத்திணறலால் மயங்கிவிட்டதாகக் கூறி, அவரை செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் பெருந்தேவி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து பெருந்தேவியின் உடல் அரசு மருத்துவமனையில் உள்ள உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பப்பட்டது.

அப்போது அறிக்கையில் பெருந்தேவியின் கழுத்து எலும்பு முறியக்கப்பட்டும், அவர் மூச்சு திணறி கொலை செய்யப்பட்டது அம்பலமானது. உடனே களத்தில் இறங்கிய செங்கல்பட்டு நகர காவல்துறையினர் மருமகள் இந்துஜாவிடம் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் கடந்த 5 வருடங்களாகவே மாமியார் எங்கள் நிம்மதியை கெடுத்து வந்தார். “அவர் இறந்தால் தான் நாங்கள் சந்தோஷமாக வாழ முடியும் என்பதால் தான் கொலை செய்தேன்” என இந்துஜா” பகிரங்கமாக வாக்குமூலம் அளித்தார்

இதையடுத்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் இந்துஜாவை கைது செய்து செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மாமியாரைக் கொலை செய்து மருமகள் நாடகமாடிய சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாமியார் இறந்தால் நிம்மதியாக வாழலாம் என்ற தவறான எண்ணத்தில் துணிந்து செய்த இந்த ஒரு கொடூர செயல் இறுதியில் அந்த குடும்பத்தின் நிம்மதியை முற்றிலுமாகப் பறித்துவிட்டது பெற்ற தாயைப் பறிகொடுத்து மனைவியையும் சிறைக்கு அனுப்பிவிட்டு வாழ வேண்டிய வாழ்க்கையை இழந்து நடுத்தெருவில் நிற்கும் கணவன் வெங்கடேசனின் நிலைமை காண்போரைக் கண்கலங்க வைக்கிறது. கோபமும் வன்மமும் நிறைந்த ஒரு நொடி முடிவு, இரு பெண்களின் வாழ்க்கையையும் முடிவுக்குக் கொண்டு வந்து அந்த வீட்டையே மீள முடியாத சோகத்தில் மூழ்கடித்துள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com