உடலுறவை ரகசியமாக படம் பிடித்த மாணவர்! 32 பேர் இருந்த குழுவில்.. வீடியோவை பகிர்ந்து துணிகர செயல் - கெத்து காட்ட செய்யும் செயலா இது?

உடலுறவு கொண்ட பிறகு, அந்தப் பதிவின் வீடியோவை, 32 உறுப்பினர்களைக் கொண்ட ஒரு குழுவின் அரட்டைப் பகுதிக்கு அவர் அனுப்பியதாகக் கூறப்படுகிறது.
North Carolina intimate video case
North Carolina intimate video case
Published on: 
Updated on: 
1 min read

அமெரிக்காவின், ஷார்லட்டிலுள்ள வடக்கு கரோலினாவில் பல்கலைக்கழக மாணவி ஒருவருடன் மாணவர் ஒருவர் உடலுறவில் ஈடுபட்டதை படம்பிடித்து, அந்த வீடியோவை ஒரு மாணவர் குழுவின் அரட்டைப் பகுதிக்கு அனுப்பியதாகக் கூறப்பட்ட நிலையில் 19 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செப்டம்பர் 19 அன்று, அலெக்சாண்டர் மைக்கேல் இவானாஃப் என்ற மாணவர், ஒரு பெண்ணுடன் உடலுறவு கொள்ளும்போது, ​​தனது கைப்பேசியைப் பயன்படுத்தி ரகசியமாக வீடியோ பதிவு செய்துள்ளார். பின்னர் அதனை அந்த பெண்ணின் அனுமதியின்றி ஒரு அரட்டை குழுவில் பகிர்ந்ததாக அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர். இவானாஃப் மீது, தனிப்பட்ட படங்களை வெளியிட்டது தொடர்பாக ஒரு குற்றச்சாட்டும், இரகசியமாக படம் பிடித்தது உட்பட இரண்டு குற்றச்சாட்டுகளும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக குறைப்படுகிறது.

இவனாஃபும் அந்தப் பெண்ணும் உடலுறவு கொண்ட பிறகு, அந்தப் பதிவின் வீடியோவை, 32 உறுப்பினர்களைக் கொண்ட ஒரு குழுவின் அரட்டைப் பகுதிக்கு அவர் அனுப்பியதாகக் கூறப்படுகிறது.

மேலும், சட்ட அமலாக்க அதிகாரிகளுடனான ஒரு நேர்காணலின் போது, ​​இவனாஃ அந்தப் பாலியல் செயலை வேண்டுமென்றே பதிவுசெய்து, அதை குழுவின் அரட்டைப் பகுதிக்கு அனுப்பியதை ஒப்புக்கொண்டதாகக் கூறப்படுகிறது. அந்த வீடியோவை எடுப்பது குறித்தோ அல்லது இதை குழுவில் அனுப்புவது குறித்தோ எந்த ஒரு அனுமதியையும் இவனாஃ பாதிக்கப்பட்டவரின் பெறவில்லை என்பதையும் அவர் அதிகாரிகளிடம் ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது.

மேலும், இவனாஃப் கடந்த திங்களன்று ( அக் 19 ) கைது செய்யப்பட்டு, கடந்த செவ்வாயன்று (அக் 20) 10,000 டாலர் பிணைத்தொகையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது ஒருபுறம் இருக்க இவானாஃப் ஒரு மாணவர் அல்ல என்று சார்லட்டில் உள்ள வடக்கு கரோலினா பல்கலைக்கழகத்தின் செய்தித் தொடர்பாளர் செய்தியாளர்களிடம் அதிர்ச்சி தரும் தகவலை தெரிவித்துள்ளார்.

"குற்றம் சாட்டப்பட்ட நபர் தற்போது பல்கலைக்கழகத்தில் பயிலவில்லை. இந்த வழக்கில் கூறப்படுவது உண்மையாக இருந்தால், அது கண்டிக்கத்தக்கது. எங்கள் வளாக சமூக உறுப்பினர்களிடமிருந்து இதை நாங்கள் எதிர்பார்க்கவோ அல்லது பொறுத்துக்கொள்ளவோ ​​மாட்டோம்," என்று அந்த பல்கலைக்கழகத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். மேலும், இது குறித்து உயர்மட்ட விசாரணை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தரப்பில் இருந்து கூறப்பட்டுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com