அசோக் நகர் - "திகிலூட்டும் அமானுஷ்ய வீடு!" 17 வருடங்களுக்கு முன்பு நடந்த 'கொடூர கொலைகள்' - இன்ஸ்டா இளைஞர்களால் மீண்டும் வெளிச்சத்திற்கு வந்தது எப்படி?

2008ம் ஆண்டு நவம்பர் 20ம் தேதி சரவணன், உள்துறைத் துறையில் ஓய்வு பெற்ற துணைச் செயலாளரான அவரது மனைவி கஸ்தூரி மற்றும் அவர்களது பணிப்பெண் அன்பரசி ஆகியோர் அந்த வீட்டில் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டனர்.
Ashok nagar haunting house
Ashok nagar haunting houseAshok nagar haunting house
Published on
Updated on
1 min read

இன்ஸ்டாகிராமில் தற்போது டிரண்ட் (Trend) ஆகி வரும் விஷயங்களில் அமானுஷ்ய வீடியோக்களும் ஒன்று. இதை விரும்பாதவர்களே இருக்கமாட்டார்கள். பயத்தை தந்தாலும் பலரின் விருப்பப்பட்டியலில் இந்த அமானுஷ்ய வீடியோக்கள் இருக்கத்தான் செய்கிறது. அந்த வரிசையில் கடந்த பிரவரி மாதம் டிரெண்ட் ஆகி வந்த வீடியோதான் அசோக் நகர் அமானுஷ்ய வீடு. இந்த வீட்டில் 3 பேர் மிக கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளனர். மேலும், பராமரிப்பின்றி கொலை நடந்த அன்று வீடு எப்படி அலங்கோலமாக இருந்ததோ அதேபோல இருந்துள்ளது. அங்கு சூழ்ந்துள்ள இருள், பாழடைந்த தன்மை, கேட்பாறின்றி தன்னந்தனியாக இருக்கும் அந்த வீட்டிற்கு இளைஞர்கள் சிலர் சென்றுள்ளனர்.

அப்போதான் இது மீண்டும் வெளிய தெரிய ஆரம்பித்தது. இன்ஸ்டாகிராம் வீடியோ எடுப்பதற்காக அந்த இளைஞர்கள் அந்த வீட்டின் சுவரினை ஏறி குதித்து உள்ளே சென்றுள்ளனர். சரி, அப்படி அந்த வீட்டில் என்னதான் நடந்தது? என்று சற்று பார்க்கலாம். அசோக் பில்லர் அருகே இருக்கும் அசோக் நகர் கண்ணப்பர் தெருவில் அமைந்துள்ளது அந்த அமானுஷ்ய வீடு. அந்த பாழடைந்த வீடு தமிழ்நாடு மினரல்ஸ் லிமிடெட்டின் முன்னாள் நிர்வாக இயக்குநர் சரவணன் என்பவருக்கு சொந்தமானது. கடந்த 2008ம் ஆண்டு நவம்பர் 20ம் தேதி சரவணன், உள்துறைத் துறையில் ஓய்வு பெற்ற துணைச் செயலாளரான அவரது மனைவி கஸ்தூரி மற்றும் அவர்களது பணிப்பெண் அன்பரசி ஆகியோர் அந்த வீட்டில் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டனர். இந்த வழக்கில் உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்த பிறகு விசாரணை துரிதப்படுத்தப்பட்டு 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

மிகப்பெரிய அளவில் செல்வாக்கு மிக்கவராக இருந்த சரவணன் வீட்டில் இருந்த நகைகள், பணம் உள்ளிட்ட பொருட்களை திருடும் நோக்கத்திற்காக சென்றபோது இந்த கொலை நடந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், அந்த வீட்டுக்குள் செல்வது விசாரணையின் நோக்கத்தை சிதைப்பது, அடையாளங்களை அழிப்பது போன்ற குற்றத்தின் கீழ் வரும் என போலீசார் எச்சரித்துள்ளனர். இந்த பாழடைந்த வீட்டின் தோற்றத்தை கண்டதுமே பலரும் இங்கு வரத்தொடங்கியுள்ளனர். குறிப்பாக, யூடியூபர்ஸ், இன்ஸ்டாகிராமில் வீடியோ எடுப்பவர்கள் போன்றோர் இங்கு வந்துள்ளனர். ஆனால், சுமார் 17 வருடத்திற்கு முன்பு நடந்த இந்த கோரசம்பவம் மீண்டும் மக்களின் பார்வைக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com