
பெங்களூரு தெற்கு மாவட்டம், சன்னபட்னா தாலுகாவில் உள்ள மகாலி கிராமத்தைச் சேர்ந்தவர் 45 வயதான லோகேஷ். இவர் அதே பகுதியில் முன்னாள் ஊராட்சி தலைவராக இருந்துள்ளார். இவருக்கும் சந்திரலேகா என்ற பெண்ணுக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது, சந்திரலேகா கிராம பஞ்சாயத்து உறுப்பினராக இருந்துள்ளார். அப்போது சந்திரலேகாவுக்கு அதே பகுதியைச் சேர்ந்த யோகேஷ் என்பவருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது.
இதனை அறிந்து லோகேஷ் தனது மனைவியை கள்ளத்தொடர்பை விடுமாறு கண்டித்துள்ளார். இதனால் கோபமடைந்த சந்திரலேகா யோகேஷுடன் சேர்ந்து லோகேஷை கொலை செய்ய திட்டம் தீட்டி கூலிப்படைக்கு பணம் கொடுத்து லோகேஷை கொலை செய்ய கூறியுள்ளனர். அதன்படி சில தினங்களுக்கு முன்பு லோகேஷ் வேலைக்கு சென்று விட்டு காரில் வீடு திரும்பிக்கொண்டிருந்த போது சன்னபட்னா தாலுகாவில் உள்ள எம்.கே. டோடி பகுதியில் காரை வழிமறித்த கூலிப்படை மற்றும் அவர்களுடன் சென்ற யோகேஷ், லோகேஷை காரை விட்டு இறக்கி கொலை செய்ய பார்த்துள்ளனர்.
அவர்களிடம் இருந்து லோகேஷ் தப்பி ஓட முயற்சி செய்துள்ளார், அப்போது அவரை பிடித்து அவரது வாயில் வலுக்கட்டாயமாக விஷத்தை ஊற்றி கொலை செய்துவிட்டு தற்கொலை போல சித்தரித்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் லோகேஷின் உடலை கைப்பற்ற பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்துள்ளனர். மேலும் வழக்கு பதிவு செய்து அங்கிருந்த ஆதாரங்களை சேகரித்துள்ளனர் அப்போது விஷ பட்டால் மட்டும் கிடைத்த நிலையில் அதன் மூடி கிட்டத்தட்ட 100 மீட்டர் தொலைவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் லோகேஷி குடும்பத்தார் மற்றும் நட்பு வட்டாரத்தில் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இந்நிலையில் செல்போன் சிக்னல் வைத்து லோகேஷ் இறந்த போது அவ்விடத்தில் யோகேஷ் இருந்ததை அறிந்த போலீசார் அவரை கைது செய்து அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். இதில் யோகேஷ் நடந்தவற்றை ஒப்புக்கொண்டு போலீசாருக்கு வாக்குமூலம் கொடுத்துள்ளார். இதையடுத்து போலீசார் சந்திரலேகா மற்றும் கூலிப்படையை சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மனைவியே கணவனை கூலிப்படை வைத்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.