“துண்டு துண்டாக வெட்டி சாக்கு மூட்டையில் போடப்பட்ட உடல்” - நீண்ட நாட்களாக பிளான் போட்டு பெண் செய்த பகீர் சம்பவம்!

நீண்ட நாட்களாகியும் கடனை திருப்பி செலுத்தாமல் ராசல் தேவி காரணம் கூறி வந்த நிலையில் கடன் கொடுத்தவர்கள் பணத்தை கேட்டு தொல்லை செய்து வந்திருக்கின்றனர்.
ராஜஸ்தான் மாநிலம்
Published on
Updated on
2 min read

ராஜஸ்தான் மாநிலம், டோங் மாவட்டம் லாவண்டர் கிராமத்தை சேர்ந்தவர் 53 வயதுடைய ராசல் தேவி. இவரது கணவர் கடந்த 7 வருடங்களுக்கு முன்பு உடல் நல குறைபாடு காரணமாக உயிரிழந்த நிலையில் தனது இரண்டு மகள்கள் மற்றும் மகனுடன் தனியாக வசித்து வந்திருக்கிறார். பின்னர் நாளடைவில் மகள்கள் மற்றும் மகனுக்கு திருமணம் செய்து வாய்த்த ராசல் தேவி அதற்காக தனியார் நிதி நிறுவனம் மற்றும் அக்கம் பக்கத்தில் தெரிந்தவர்களிடம் சுமார் 25 லட்சம் ரூபாய் கடன் பெற்றதாக சொல்லப்படுகிறது. நீண்ட நாட்களாகியும் கடனை திருப்பி செலுத்தாமல் ராசல் தேவி காரணம் கூறி வந்த நிலையில் கடன் கொடுத்தவர்கள் பணத்தை கேட்டு தொல்லை செய்து வந்திருக்கின்றனர்.

இதனால் எப்படியாவது கடனை திரும்ப கொடுத்துவிட வேண்டும் என நினைத்த ராசல் அவரது வீட்டிற்கு அருகில் வசித்து வரும் 70 வயதுடைய மூதாட்டி ஹர்பாய் என்பவருடன் பழகி வந்திருக்கிறார். அப்போது அவரிடம் தங்க நகைகளும், பணமும் இருப்பதை அறிந்த ராசல் எப்படியாவது அவரிடம் இருந்து நகைகள் மற்றும் பணத்தை எடுத்து கொள்ள வேண்டும் என திட்டம் திட்டியிருக்கிறார். அதன்படி தினமும் மூதாட்டியின் வீட்டிற்கு சென்று அவரிடம் பேசி பழகி வந்த ராசல் கடந்த (ஜூன் 9) ஆம் தேதி மூதாட்டியை அவரது வீட்டிற்கு உணவருந்த அழைத்ததாக சொல்லப்படுகிறது.

எனவே மூதாட்டி ஹர்பாய், ராசல் வீட்டிற்கு சென்ற நிலையில் அவரிடம் பேசி கொண்டிருந்த ராசல் திடீரென அவரது கழுத்தை நெரித்து கொலை செய்து அவரது உடலில் இருந்த நகைகளை எடுத்து பதுக்கி வைத்திருக்கிறார். பின்னர் உடலை என்ன செய்வதென்று தெரியாமல் இரண்டு நாட்கள் சடலத்தை வீட்டிலேயே வைத்திருந்த ராசல் பின்னர் உடலை துண்டு துண்டாக வெட்டி சாக்கு பைகளில் தனித்தனியாக கட்டி கிராமத்திற்கு ஒதுக்குபுறமாக உள்ள நிலத்தில் வீசியிருக்கிறார். எனவே அப்பகுதியில் உடல் அழுகி துர்நாற்றம் வீசவே அக்கம் பக்கத்தில் வசித்து வந்த மக்கள் இதுகுறித்து போலீசாருக்கு தெரிவித்துள்ளனர்.

Admin

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சந்தேகத்திற்கு இடமாக இருந்து சாக்கு மூட்டைகளை பிரித்து பார்த்த போது அதில் அழுகிய மனித உடல் பாகங்கள் இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர். பின்னர் இது குறித்து வழக்குப்பதிவு செய்த விசாரணை மேற்கொண்ட நிலையில் கொலை செய்யப்பட்டவர் அதே பகுதியை சேர்ந்த 70 வயது மூதாட்டி ஹர்பாய் என்பது தெரியவந்தது. தொடர்ந்து நடத்திய விசாரணையில் மூதாட்டியை நகை மற்றும் பணத்திற்காக பக்கத்து வீட்டை சேர்ந்த ராசல் தேவியே கொலை செய்தது தெரியவந்த நிலையில் போலீசார் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைந்திருக்கின்றனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com