"75 வயது மூதாட்டியை சீரழித்த கொடூரன்..!" - பலாத்காரத்தை மகளே நேரில் பார்த்த அவலம்!

அதனை கேட்டு பக்கத்து வீட்டினர்கள் மற்றும் அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து
namakkal crime
Published on
Updated on
1 min read

குமாரபாளையம் அருகே 75 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமை  செய்தவரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைப்பு. நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே உள்ள அம்மன் நகர் பகுதியினை சேர்ந்த 75 வயது மூதாட்டி. இவர் கடந்த சில வருடங்களாக வயது மூப்பின் காரணமாக படுத்த படுக்கையாகவே இருந்து வந்துள்ளார். அவரது மகள் பாதுகாப்பில் இருந்து வரும் மூதாட்டி சற்று சுயநினைவு தவறியவரும் ஆவார்.

ஒரு நாள் மூதாட்டியை அவரது மகள் குளிக்க வைக்கும் பொழுது உடலில் சில காயங்கள் இருந்ததால் அதிர்ச்சி அடைந்துள்ளார். இது குறித்து தனது தாயிடம் கேட்ட பொழுது அவருக்கு பதில் சொல்ல தெரியவில்லை. சுயநினைவின்றி இருந்து வருவதால் எதுவும் சொல்லாமல் இருந்துள்ளார். மகளும் இது படுத்த படுக்கையாக இருப்பதாலும், இல்லை வேறு ஏதேனும் இருக்கலாம் என்று சந்தேதிகித்துள்ளார். இன்னிலையில் நேற்று மாலை மூதாட்டியின் மகள் வெளியே சென்றிருந்த பொழுது மர்ம நபர் ஒருவர் தனியாக இருந்த மூதாட்டிக்கு பாலியல் தொல்லை செய்து கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். மேலும் கத்தி கூச்சல் போட்டுள்ளார். அதனை கேட்டு பக்கத்து வீட்டினர்கள் மற்றும் அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து அந்த மூதாட்டிக்கு பாலியல் தொந்தரவு செய்த நபரை பிடித்து சரமாரியாக தாக்கியள்ளனர். அதனையடுத்து குமாரபாளையம் காவல் நிலையம் கொண்டு வந்து ஒப்படைத்தனர்.  

மேலும் பாலியல் தொல்லையால் காயமடைந்த மூதாட்டி குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணையில் கைது செய்யப்பட்ட நபர் அதே பகுதியைச் சேர்ந்த ராஜி (55) என்பது தெரிய வந்தது. இவர் அப்பகுதியில் தான்தோன்றித்தனமாக சுற்றி வந்ததும், இவருக்கு குடும்ப எதுவும் இல்லை என்பதும் தெரிய வந்தது. 75 வயது மூதாட்டியை பாலியல் வன்புணர்வு செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

கடந்த வாரங்களில் நடந்த பாலியல் குற்றங்கள் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வந்த நிலையில், 75 வயது மூதாட்டிக்கு பாலியல் வன்கொடுமை நடந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெண்கள், குழந்தைகள் மட்டுமின்றி மூதாட்டிகளுக்கும் எதிராக வன்கொடுமை குற்றங்கள் அரங்கேறி வருவது, பெண்கள் பாதுகாப்பு குறித்த பெரும் அச்சத்தையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com