கணவன் மனைவி இருவருக்கும் தனித்தனி கள்ளத்தொடர்பா? தவெக நிர்வாகியுடன்.. கையும் களவுமாக சிக்கிய மனைவி!

நேற்று தவெக மாவட்ட செயலாளர் டில்லிபாபு உடன் தீபா திருப்பதி கோவிலுக்கு சென்று இருப்பதாக கணவருக்கு தகவல் வந்துள்ளது
கணவன் மனைவி இருவருக்கும் தனித்தனி கள்ளத்தொடர்பா? தவெக நிர்வாகியுடன்.. கையும் களவுமாக சிக்கிய மனைவி!
Published on: 
Updated on: 
2 min read

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த தெக்கலூர் பகுதியைச் சேர்ந்தவர்  பிரதாப். இவருக்கும் தீபா என்ற பெண்ணுக்கும் கடந்த 2018 ஆம் ஆண்டு இரு வீட்டார் சம்மதத்துடன் திருப்பதியில் திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு 6 வயதில் குழந்தை உள்ளது. இந்நிலையில் பிரதாப்புக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாலும், மனைவி தீபாவுக்கு  வேறொருடன் தொடர்பு இருப்பதாலும் இருவரும்  கருத்து வேறுபாட்டால் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் தீபா  கணவனை பிரிந்து  குழந்தையுடன் திருத்தணியில் தன் தாய் வீட்டில் நான்கு வருடங்களாக வசித்து வருகிறார். ஆனால் தீபா திருத்தணி பகுதியைச் சேர்ந்த திருமணமான தவெக மேற்கு மாவட்ட செயலாளர் டில்லிபாபு என்பவருடன் பல்வேறு இடங்களில் சுற்றி வருவது கணவர் பிரதாப்புக்கு தெரிய வந்துள்ளது.

தீபா தாய் வீட்டில் தனியாக வசித்து வரும் நிலையில், அங்கு டில்லிபாபு வீட்டிற்கு வருவதும், அவருடன் மெரினா பீச், திருவண்ணாமலை, திருப்பதி கோவிலுக்கு சென்று வரும் போட்டோ வீடியோக்களும் பிரதாப்புக்கு  கிடைத்துள்ளது. இந்நிலையில் நேற்று தவெக மாவட்ட செயலாளர் டில்லிபாபு உடன் தீபா திருப்பதி கோவிலுக்கு சென்று இருப்பதாக கணவருக்கு  தகவல் வந்துள்ளது. தகவலின் அடிப்படையில் திருப்பதிக்கு சென்ற பிரதாப் மனைவியுடன் சுற்றி வரும் டில்லிபாபுவுடன் தகராறில் ஈடுபட்டு இருவரும் தாக்கிக் கொண்டுள்ளனர். 

இந்நிலையில்  டில்லிபாபும் தீபாவும் இணைந்து தன்னை கொலை செய்து விடுவதாக மிரட்டுவதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து தன் குழந்தையை என்னிடம் மீட்டு தர வேண்டுமென பிரதாப் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார். சிறிது நேரத்தில் அங்கு வந்த மனைவி தீபா, தன் கணவர் பிரதாப் வேறொரு பெண்ணுடன் தொடர்பில் இருந்து வந்ததால் அவரிடமிருந்து பிரிந்து நான்கு வருடங்களாக திருத்தணியில் தனது தாய் வீட்டில் வசித்து வருவதாகவும், தான் உறவினர்கள் நண்பர்கள் உடன் பேசுவதை  தவறாக சித்தரித்து கணவர் பேசி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் தனக்கு திருமணத்திற்கு போட்ட 60 சவரன் நகையை அவர் விற்று பல்வேறு பெண்களிடம் உல்லாசமாக இருந்து வந்ததாகவும், தவெக மாவட்ட செயலாளர் டில்லி பாபுவுக்கும்  தனக்கும் எந்த கள்ளத்தொடர்பும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார். டில்லிபாபு தனது குடும்ப நண்பர் என்றும் அவர் தளபதி விஜய் கட்சியில் மாவட்ட செயலாளராக இருந்து வருவதால் தளபதி விஜய் ரொம்ப பிடிக்கும் என்பதால் அவருடன் கட்சியில் இருந்து வருவதாக தெரிவித்துள்ளார்.

மேலும் கணவர் பிரதாப் 50 சவரன் நகை கொடுத்தால் அவதூறு பரப்பதை நிறுத்தி விடுவதாக கூறுவதாகவும், இல்லையென்றால் தன்னையும் குழந்தையும் கொலை செய்து விடுவேன் என மிரட்டுவதாகவும்  தெரிவித்துள்ளார். இதனால் தன் குழந்தையும் தன்னையும் போலீசார் பாதுகாப்பு அளித்து அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனைவி தீபா மாவட்ட காவல் கண்காணிப்பு அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார். கணவன், மனைவி இருவரும் மாறி மாறி குற்றம்சாட்டி எஸ்பி அலுவலகத்தில் புகார் கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com